பக்கம்:இன்றும் இனியும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 207 அரிஸ்டாட்டிலும் பிளேட்டோவும் பெரிய காரியம் செய்தார்கள். இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர்கள் காலத்திய மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா? அரிஸ்டாட்டில் பெரிய நூல் எழுதிக்கொண்டிருக்கையில், கிரேக்க மக்கள் என்ன செய்தார்கள் ? சாதாரண மனிதனை, உங்களைப் போல, என்னைப்போல ஆசாமியைச் சிங்கத்தினிடத்திலே தூக்கிப்போட்டு, அது அவர் களைக் குதறிக் கொன்று தின்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிளேட்டோ எழுதிய "ரிபப்ளிக் என்ற நூலில் சமுதாயமும் ஆட்சியும் எவ்வாறு இருக்க வேண்டும் என்று கூறினாரோ அதைப்போலச் சாதாரண மக்கள் வாழ்வு அமைய வில்லை. புருஷனைக் கொண்டுபோய்ச் சிங்கத் தினிடம் போட்டு மனைவியை "வேடிக்கை பார்” என்று சொல்லினர் கிரேக்கர்கள். இது சாதாரண மனிதனுடைய வாழ்க்கை. ஆகவே, பிளேட்டோவின் எழுத்துக்கும் அன்று வாழ்ந்த மக்கள் வாழ்வுக்கும் தொடர்பே இல்லாமற் போய்விட்டது. அதன் பயனாக அந்த நாகரிகம் ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது என்பதை மறந்துவிடாதீர்கள்! அரிஸ்டாட்டிலையும் பிளேட்டோவையும் வைத்து வளர்ச்சிக் கணக்குப் போட்டால், அந்த நாகரிகம் மிக மிக உயர்ந்ததுதான். சாதாரண கிரேக்க மனிதனை வைத்து வளர்ச்சிக் கணக்குப் போட்டால், மிகமிகக் கீழே போய் நிற்கும். ஆனால், தமிழனைப் பொறுத்தமட்டிலே அவ்வளவு ஏற்றத்தாழ்வு நிலை எப்போதுமே இல்லை. சாதாரண மனிதனுடைய வாழ்க்கையை ஒட்டித்தான் தமிழ் இலக்கியம் வளர்ந்தது. ஆகையினால்ேதான், பி.டி. சீனிவாச ஐயங்கார், 'தமிழ் இலக்கியத்தை