பக்கம்:இன்றும் இனியும்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 அ.ச. ஞானசம்பந்தன் வைத்துக் கொண்டே தமிழன் வரலாற்றை எழுதி விடலாம் என்றார். பழந்தமிழ் இலக்கியம் சாதாரண மனிதனின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தோன்றிய இந்தத் தமிழ்நாட்டில் அதே தமிழைப் பேசுபவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கான ஒரு நாகரிகத்தில் நீங்களும் நானும் இன்றும் இருந்து கொண் டிருக்கிறோம். மற்ற நாடுகளில் இந்த வளர்ச்சி ஒருபுறம் வளர்ந்து கொண்டே போயிற்று; ஆனால், மற்ற ஒரு பக்கம் தீய்ந்து கொண்டே வந்தது. அவர்களுடைய நாட்டிலே அரிஸ்டாட்டிலும், பிளேட்டோவும், அரிஸ்டோபொனிசும் என்னென்னவோ எழுதினார் கள். சாதாரண மக்கள் அவர்கள் கட்டிய கோபுரங்களை எல்லாம் அழித்துக்கொண்டே வந்தார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டிலே வளர்ச்சி அப்படியில்லை. தமிழன் எல்லா உறுப்புகளும் சேர்ந்து வளர வேண்டுமென்றும் அதுவே வளர்ச்சி என்றும் நினைத்தான். மூளை வளர்ந்ததனாலே மண்திணிந்த நிலனும் - நிலனேந்திய விசும்பும் என்று பாட்டுப் பாடினான். இருதய்ம் வளர்ந்ததனாலே. ஒன்றா இரண்டா? ஆயிரக்கணக்கான பாட்டுகள் பாடினான். 'உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதெனினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே (புறம் - 182) என்று பாடினவன் இவன். அறிவு, உணர்வு என்ற இரண்டையும் வளர்த்தான். ஆதலால், தமிழன் அன்று வாழ்ந்தான் இன்றும் வாழ்கிறான். 2000 வருஷமாக இரண்டையும் வளர்த்தான்; இரண்டிலே எது முக்கியம் என்று பார்த்தான் அவன். அறிவைவிட உணர்வு கொஞ்சம் பலமாக இருக்க வேண்டும்.