பக்கம்:இன்றும் இனியும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 9 209 ஆகையினால்தான், பத்துப்பாட்டிலும் எட்டுத் தொகையிலும் அம்மாதிரி விஞ்ஞானம் போன்ற அறிவுத்துறைப் பாடல்கள் கொஞ்சம். மனம் விரிந்தால் தான் நாடு வாழ முடியும்; அறிவு விரிந்தால் தன்னலத்தில், அகங்காரத்தில்தான் முடியும். எனக்கு இது பயன்படுமா என்றுதான் அறிவு தொடங்கும். அறிவின் துணைகொண்டு அணுவை உடைத்தான் விஞ்ஞானி. அதைப் பிறன்தலையில் போட்டுத் தான் மட்டும் வாழவேண்டுமென்று கருதினான் அரசியல் வாதி. ஏன்? மனம் விரியாமல் அறிவுமட்டும் விரிந்த ஒரே காரணத்தால்தான். இந்த மாதிரி வளர்ச்சியைத் தமிழன் அன்று விரும்பவில்லை. இன்று விரும்பினால்...? தமிழ்மொழியும் தமிழினமும் தற்காலத்தில் பெற்றுள்ள நிலை இதுதான். வளர்ச்சி அடைந்துகொண்டு வருகின்றோம். ஆனால், அது ஒருபக்க வளர்ச்சியாக இருக்கிறது. அது என்ன ஆகுமோ தெரியாது. இப்பொழுதாவது கொஞ்சம் பழமையை நினைத்துப் பார்ப்போமேயானால், உணர்வைக் கொஞ்சம் வளர்ப்போமானால், ஒருவாறு வாழ முடியும். தமிழ் நாட்டின்மேல் பலர் படையெடுத்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், நல்ல வலுவாக ஆழமாக ஆணிவேரும் சல்லிவேரும் ஒடியிருந்தது. இன்றைக்கு நாம் என்ன செய்கிறோம்? ஆணிவேரும் சல்லிவேரும் கண்ணுக்குத் தெரியாத தனால் அவற்றை மறந்துவிட்டோம். வேர்கள் வலு இல்லையானால் என்ன ஆகும்? பிறர் படையெடுப்பு என்ற காற்றடித்தால் அனைத்தும் ஒழிந்துவிடும். அம்மாதிரி வளர்ச்சி வேண்டா. பின்னர் எது வேண்டும்? வானவெளிப் பயணமும் இருக்கட்டும்; இஇ-14