பக்கம்:இன்றும் இனியும்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 அ.ச. ஞானசம்பந்தன் பண்பாட்டு வளர்ச்சியும் ஏற்படட்டும். பிறருக்கும் வாழ உரிமை உண்டு; பிறருக்கும் நினைக்க உரிமை உண்டு. பிறருக்கும் பேச உரிமை உண்டு என்று ஏட்டிலே கண்ட அளவோடு நில்லாமல், வாழ்க்கை முறையிலே வாழ்ந்து காட்டினான் அன்றைய தமிழன். ஆனால், இன்றோ? விண்வெளியைப் பற்றி எழுத முனைந்துவிட்டோம். பிற துறையில் நம்முடைய வளர்ச்சி நின்றுவிட்டது. தமிழும் தமிழினமும் என்ன ஆகும் என்று என்னைக் கேட்டுப் புண்ணியமில்லை! இப்படியே வளர்ந்துகொண்டுபோனால், அது ஒருபக்க வளர்ச்சியாக ஆகிவிடலாம் என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கின்றேன். வினா. சங்ககாலம் தொடங்கி இன்றுவரையில் தமிழ் வளர்ந்துகொண்டே வருகிறதா? வளர்ச்சிக்கோ, வளர்ச்சியின்மைக்கோ காரணங்கள் யாவை ? விடை நன்றாக இருக்கிறது இவ் வினா! எனக்கு நல்ல தண்டனை என்று நினைக்கிறேன். பதினாறு ஆண்டுகள் இலக்கிய வரலாற்றுப் பாடம் நடத்துகையில் இத்தகைய வினாக்களை மாணவர் கட்குத் தருவது வழக்கம். எவ்வாறுதான் இந்தக் கேள்விகள் உங்களுக்கு உதயமாயின என்றுதான் தெரியவில்லை. இன்றுவரையில் தமிழ் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறதா? வளர்ச்சிக்கோ வளர்ச்சி யின்மைக்கோ காரணங்கள் யாவை? என்று எலிப் பொறியில் அடைப்பதுபோல் 'என்னை அடைக் கிறீர்கள். எந்தப் பக்கமும் போக முடியவில்லையே! ஆனால், நான் முதலிலேயே கூறியபடி யான் கூறப் புகுபவை தனிப்பட்ட என்னுடைய கருத்துகள் தாமே ஒழிய, இதில் காழ்ப்போ விரோதமோ இல்லை.