பக்கம்:இன்றும் இனியும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 9 211 தமிழ் என்று எடுத்துக் கொண்டீர்கள். ஆகவே, தமிழ் இன வளர்ச்சியை வேறாகப் பிரித்துவிட்டுத் தமிழ்மொழி வளர்ச்சியை மட்டும் எடுத்துக் கொள் கிறேன்; மொழி வளர்ச்சியோடு இன வளர்ச்சியும் பின்னிக் கிடக்கிறது என்று முதல் வினாவிற்கு விடை கூறுகையில் கூறினேன். ஆனால், இப்பொழுது வேண்டும் என்றே பிரித்து விடுகின்றேன். மொழி வளர்ச்சி என்று இங்கே எதனை எடுத்துக் கொள்கின்றேன் என்றால், இலக்கிய வளர்ச்சியை. இலக்கிய வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் நம் இலக்கியம் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. வெறும் அனுபவ உலகமாக இருந்த சங்ககாலப் பாடல் உலகம் கொஞ்சம் விரிந்து சென்று, காப்பிய உலகிலே சிலப்பதிகாரமாக, மணிமேகலையாக, சிந்தாமணியாக, பெருங்கதையாக வளர்ந்து, பின்னர் 9, 12ஆம் நூற்றாண்டுகளில் கம்பனாக - பெரிய புராணமாக - விரிந்து நின்றது. கூடவே நிகண்டு முதலான சிறு நூல்களும் வளர்ந்தன. ஆனாலும், தொல்காப்பியத் துக்கப்பால் இலக்கணம் வளராமல் ஓரளவு நின்றுதான் போயிருந்தது. அப்படியே நீண்ட அந்த வளர்ச்சி 12-ஆம் நூற்றாண்டில் ஏறத்தாழ முற்றிற்று என்று சொல்லிவிடவேண்டும். அப்பொழுதுதான் தமிழன் விழித்துக்கொண்டான். எவ்வளவுதான் இந்த உணர்ச்சி உலகை வைத்துக் கோட்டையாகக் கட்டினாலும் அது மணலில் கட்டிய வீடு என்பதைக் கண்டுபிடித்தான். அதற்குரிய காரணங்கள் பல. அதை ஆராய இப்போது நேரமில்லை. தமிழ்நாட்டிலே தோன்றிய சில புதிய கிளர்ச்சிகள், உணர்ச்சி உலகிலே கட்டப்பட்ட இந்தக் கோட்டையைப் பொடிசூரண மாக்கிவிட்டன. இன்றைக்கும் கூட அதைப்