பக்கம்:இன்றும் இனியும்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 அ.ச. ஞானசம்பந்தன் பார்க்கலாம். புள்ளி விவரங்களைப் பற்றி எல்லாரும் நன்றாக அறிவீர்கள். இந்தப் புள்ளி விவரங்களைக் கொடுத்துப் பேச ஆரம்பித்தால், சாதாரண மக்கள் வாயைப் பிளந்துகொண்டு கேட்டுக் கொண்டிருப்பார் கள். இது மனித இயல்பு. - 13, 14-ஆம் நூற்றாண்டுகளிலே ஒரே அறிவுலகம் தான். முன்னே கூறிய புள்ளி விவரங்களையும் மெய்ம்மைகளையும் அடிப்படையாகக் கொண்ட சாத்திரக்காலம் என்று சொல்லுவார்கள். சைவ சித்தாந்த சாத்திரங்களும், வைணவ சாத்திரங்களும், ஜைன சாத்திரங்களும் தோன்றிய காலம் அது. ஆச்சரியமென்னவென்றால், இன்றைக்கு நம்முடைய விஞ்ஞானிகள் எப்படி ஒரு சாக்குக்கட்டியும் ஒரு கரும் பலகையும் வைத்துக்கொண்டு உலகத்தையே அதற்குள் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார்களோ, அது மாதிரித் தமிழனும் அன்று நிறுத்தினான். இவர்கள் கையில் அகப்பட்டது சாக்குக்கட்டியும் கரும்பலகையும். இதே மாதிரி அன்றைய தமிழன் கையில் அகப்பட்ட இரண்டு பொருள்கள் உண்டு. வேட்டி கட்டி இருந்தான்; அதற்குப் பெயர் படம். கையிலே சட்டி வைத்திருந்தான் சோறு உண்பதற்கு அதற்கு கடம் என்பது பெயர். கடம், படம், கடபடம். இவை மூன்றும் அவனிடம் உள்ளவை. இவற்றை வைத்துக்கொண்டு எத்தனை சாத்திரங்கள் எழுதினார்கள் என்று நினைக்கிறீர்கள்? கடவுள் கொடுத்த 2 கண்கள்தாம் உண்டு. அவை நன்றாக இருந்தன. இதை வைத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தான்; பூமியைப் பார்த்தான். கையிலே சட்டி இருந்தது, இடுப்பிலே பட்டி இருந்தது - அவ்வளவுதான். கடம், படம் என்ற க் கொண்டு எத்துணை நுணுக்கமான தருக்க