பக்கம்:இன்றும் இனியும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 ல் அ.ச. ஞானசம்பந்தன் ஏதோ ஒர் அடிப்படையான குறையின் காரணமாக இந்த வளர்ச்சி நிலைபெற்றதாக இருக்க முடியவில்லை. தெலுங்கர் நம்மைவிட மிகுதிதான்; இருந்தாலும் நம்மிடமுள்ள பத்திரிகைகளில் நாலில் ஒரு பங்குகூடக் கிடையாது அங்கு. நாம் ஆண்டொன்றில் வெளியிடுகின்ற புத்தகங்களில் 10-ல் 1 பங்கு கிடையாது அங்கு போற்றத்தகுந்ததுதான். ஆனால், இது அளவால் பெரிதென்று கூறத்தக்கதே. இதில் மகிழ்ச்சியடைவதாயின் அடையுங்கள். வேண்டா என்று சொல்லவில்லை. இத்தகைய வளர்ச்சியை ஊளைச்சதை வளர்ச்சி என்று கூறலாம். இந்த வளர்ச்சியை எல்லாம் ஒரு வளர்ச்சி என்று' நினைக்கும் ஒரு மனப்பான்மை என்பால் ஏற்பட வில்லை. அதனால்தான் அஞ்சுகின்றேன். தமிழ் வளர்ந்துகொண்டே வருகிறதா? நன்றாக வளர்கிறது, மொழி வளர்ச்சி சமுதாய வளர்ச்சியாக - இன வளர்ச்சியாக ஆகாது என்பதற்குத்தான் சென்ற வினாவிற்களித்த விடையில் ரோம, கிரேக்க உதாரணங்களைக் காட்டினேன். தமிழ் நன்றாக வளர்கிறது; இல்லை என்று சொல்வதற்கில்லை. தமிழிலே நூல் எழுதுவதற்குக் கூடக் கற்றுக் கொண்டோம் அற்புதமாக, எவனும் படித்துக் குறை சொல்ல முடியாத அளவுக்கு எழுதக் கற்றுக் கொண்டோம். இந்த வளர்ச்சியோடு நம்முடைய வளர்ச்சி என்ன ஆயிற்று என்று சேர்த்துப் பார்த்தால்தான் அது முழு வளர்ச்சி என்று சொல்ல முடியும். ஆகவே, வளர்ச்சியின்மைக்குக் காரணங்கள் யாவை என்று கேட்காதீர்கள். நான் எதைச் சொல்லுவது? இத்துணை நேரம் சொன்னதுதான்.