பக்கம்:இன்றும் இனியும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 9 215 தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடினார் நாமக்கல் கவிஞர் எந்த நேரத்திலே பாடினாரோ, ஏவவும் செய்கலான், தான் தேரான்' என்ற குறளுக்குப் பொருத்தமாக அமைந்து விட்டமையே தமிழனின் தனிக்குணமாகிவிட்டது. தானாக எண்ணிப் பார்க்கமாட்டான் தமிழன்; பிறர் சொன்னதையும் கேட்கமாட்டான். இன்னொரு சிறந்த பண்பாடும் உண்டு. இந்திரர் அமிழ்தம் இயைவ தெனினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே (புறம் 182) என்று கூறிய புறநானூற்றுப் புலவன் கருத்தை அடுத்தவனைப் பொறுத்தமட்டில் செய்து காட்டுபவன் தமிழன் என்றாலும், நம்மவன் வாழப் பொறுக்காது; நம்மவரைத் தவிர பிறர் எல்லாம் வாழப் பொறுத்துக் கொள்ளலாம். அமெரிக்காவைப் பார். ஆட்டுக்குட்டியைப் பார் - என்று சொல்லிக் கொண்டிருப்போமே தவிர, நம்மவன் ஒருவன் அறிவுடையவனாகவோ, பண்பாடுடையவனாகவோ, வசதியுடையவனாகவோ ஆனால், இருக்கட்டும்; எனக்குத் தெரியாதா அவன் வளர்ந்த வளர்ச்சி என்று ஒதுக்கி எள்ளிப் பேசும் ஒரு மனோநிலை. இந்த நாட்டிலும் சமயச் சண்டை இருந்தது. யாருக்குள் : இராமானுஜரும், ஞானசம்பந்தரும், நம்மாழ்வாரும் அடித்துக்கொள்ளவில்லை. இராமானு ஜர் பேரைச் சொல்லிக்கொண்டு. ஞானசம்பந்தர் பேரைச் சொல்லிக்கொண்டு சிலர் அடித்துக் கொண்டனர். இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என்று கேட்கின்றேன். அதைச் சொல்லிச் சொல்லிக் காலம் ஒட்டிக்கொண்டு, எங்களுடைய சமயம் மிக மோசம், எங்களுடைய நாடு மிக மோசம் என்று