பக்கம்:இன்றும் இனியும்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 அ.ச. ஞானசம்பந்தன் சொல்லித் திரிய வேண்டா, கொஞ்சம் திரும்பிப் பார்த்தீர்களானால், இதை கதைதான் மேனாடு களிலும் இருக்கிறது. அங்கே எப்படி இவற்றை மறந்துவிட்டு மேலே வளர்ந்தார்களோ, அதுபோல நீங்களும் மறந்துவிட்டு மேலே வளருங்கள் என்றுதான் சொல்லுகிறேன். - இராமானுஜர் சமயச் சண்டை போட்டார் என்று எவனோ கதை எழுதி வைத்தான். அதைப் பெரிதுபடுத்துகிறீர்களே தவிர, கோபுரத்தின்மீது ஏறிக் கொண்டு அவர் அஷ்டாகூடிர மந்திரத்தைச் சொன்னாரே, நான் நரகத்திற்குப் போனால் போகிறேன். இத்தனை பேர் மோட்சத்திற்குப் போக வேண்டும்' என்று கூறினாரே, அந்தப் பண்பாட்டை ஏன் மறந்து விடுகிறீர்கள்? நம்மவர்கள் வாழ்கின்ற வாழ்க்கையைப் பார்த்தால் திருத்த முடியாத அளவுக்கு நம்முடைய பண்பாடு அழுகிவிட்டது என்று நினைய வேண்டி யுளது. பாரதி, 'மணி வெளுக்கச் சாணையுண்டு - துணி வெளுக்க மண் உண்டு - ஆனால், மனம் வெளுக்க வழி இல்லையே' என்று பாடினானே - அப்படிப்பட்ட நிலைக்கு வந்துவிட்டோம். விரல் அழுகினால் நீக்கிவிட்டு வாழலாம்; ஆனால், இருதயம் அழுகினால் அதோ கதிதான்! மறந்துவிடாதீர்கள். பண்பாடு மட்டும் வளர்ந்து மொழி வளராவிட்டாலும் கவலையில்லை; மொழி பெரிதாக வளர்ந்து எல்லாக் கலைகளையும் உரைக்கின்ற அந்தச் சக்தி உங்கள் மொழிக்கு வந்தபிறகும் உங்களுக்குப் பண்பாட்டு வளர்ச்சி இல்லையானால் பயனில்லை. வளர்ச்சி பின்மைக்குக் காரணம் நம்முடைய உள்ளத்திலே