பக்கம்:இன்றும் இனியும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 217 இருக்கிறது. எல்லாத் துறையிலேயும் வளர்ந்தோம். அந்த வளர்ச்சி பெரிதென்று இறுமாந்திருந்தோம். ஆனால், உள்ளத்திலே வளர்ச்சி இல்லாமற் போய்விட்ட காரணத்தினால்தான் இன்று பிறர் நம்மைக் கண்டு எள்ளி நகையாடுகின்ற நிலையில் இருக்கின்றோம். வினா. சங்க காலத்திலும் அத்ற்கு முற்பட்ட காலத்திலும் நிலவிய வாழ்க்கை முறைகளை இன்று மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருதல் நலமாகும் என்று கருதலாம் எனின், செயல் திட்டம் எது? கருத இயலாது எனின் காரணங்கள் யாவை? விடை: நீங்கள் எவ்வெவற்றையோ நாகரிகம் என்றும் சிறந்த வாழ்க்கை முறை என்றும் எண்ணு கிறீர்கள் இன்றைக்கு, வேட்டைக்காரன் மனைவி சொல்வதாக ஒரு.பாட்டுப் பாடினான் சங்கப் புலவன் ஒருவன். வேட்டைக்குப் போன அவள் கணவன் மீண்டும் குடிசைக்கு வந்தானாம். அப்படியே முழங்கையை மடித்து வைத்துக்கொண்டு வாயிலில் உறங்கினானாம். காற்று ஜிலு ஜிலு' என்று வருகிறது. வேட்டை ஆடுவதற்காக ஒரு பார்வை மிருகம் - பெண் மான் ஒன்றை முற்றத்தில் கட்டி வைத்திருக்கிறது. அந்தப் பெண்மானிடத்தில் ஒர் ஆண்மான் வந்து விளையாடுகிறது. அந்தப் பெண்மான் இவன் பிடித்து வளர்க்கும் பெண்மான் ஆண்மான் இயல்பாகத் திரிகின்ற ஒரு விலங்கு இந்த நிலையில் இரவு உணவுக்கான தினையைக் கோழி வந்து தின்றது. அந்தத் தலைவி பார்த்தாளாம். அவளோ கொலைத்தொழில் மிக்க வேட்டைக்காரன் மனைவி. நீங்கள் சொல்லுகிறபடி பார்த்தால்