பக்கம்:இன்றும் இனியும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 ல் அ.ச. ஞானசம்பந்தன் நாகரிகமே இல்லாதவள். ஐயோ! தினையைக் கோழித் தின்றுவிட்டுப் போய்விட்டால் இரவு உணவுக்கு என்ன செய்வது' என்று கோழியை விரட்ட வில்லையாம். கோழி தின்றுவிட்டுப் போகட்டும் என விட்டுவிட்டாளாம். என்ன நினைத்து விட்டாள் தெரியுமா? "ஐயோ பாவம்! இந்தப் பெண்மான் நம் வீட்டில் கட்டிப்போட்டு 10 ஆண்டுகளாக வளருகிறது. இன்றைக்கு ஒர் ஆண்மான் அதனுடன் வந்து விளையாடுகிறது. இப்பொழுது அந்தக் கோழியைச் சூ' என்று விரட்டினால், வீட்டிலேயே வளர்ந்த அந்தப் பெண்மான் நம் கூச்சலுக்கு அஞ்சாது; ஆனால், ஆண்மான், சத்தம் கேட்டால் பயந்து ஒடியே போய்விடும். அப்படி ஓடினால், பிணையின் இன்பத்துக்கு இடையூறு நேரும்” என்று நினைத்தாள். 'கலையே பிணைவயின் தீர்தலும் அஞ்சி என்று கவிஞன் கூறுகிறான். ஒரு பெண் மானின் மகிழ்ச்சியைப் பற்றி ஒரு வேட்டைக்காரன் மனைவி நினைந்து பார்க்கிறாள். பெண்மான் தன் மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது என்பதற்காகத் தலைவனை இரவுச் சாப்பாட்டிற்குப் பட்டினி போட்ட வேட்டைக்காரி வாழ்ந்த தமிழ்நாடு அது. இத்தகைய வாழ்க்கை முறையை இன்று மேற்கொள்ள முடியுமா என்பதே வினா. முடியாது என்பதே விடை! அந்த மனோநிலை - அந்த சீதோஷ்ண நிலை - உணவு நிலை எல்லாம் இருந்தால்தான் அந்த மாதிரி வாழ்க்கை வாழ முடியும். இன்றைக்குத் தொட்ட தெல்லாம் அவசரம் அவசரம். சாதாரண விமானம் போதாது என்று ஜெட் விமானத்திலே போகின்ற காலத்திலே, 799 அடிகளையுடைய மதுரைக் காஞ்சி' யைப் பாடினால், கேட்டுக் கொண்டா இருப்பீர்கள் நீங்கள்?