பக்கம்:இன்றும் இனியும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 冷 அக ஞானசம்பந்தன் ஆணிவேராக இருக்க வேண்டும். இருந்தால் இந்த வாழ்க்கை பயன்படும். வினா: நாடக இலக்கியத் துறையில் மனோன் மணியத்திற்குத் தனிச் சிறப்பு ஏதேனும் உண்டா? விடை: உண்டு. தமிழ் நாட்டிலே நாடகங்கள் என்று சொல்லக்கூடியவை எதுவும் கிடையாது. முத்தமிழ் என்று பேரே தவிர, இயல் தவிர வேறு எதுவும் இன்று இல்லை. ஆனால், மனோன்மணியம் படிப்பதற்காக எழுதப்பட்ட நாடகம். ஷேக்ஸ்பியரின் 'வியர் அரசன் என்ற நாடகம்போல என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நடிக்க இயலாது. ஏனென்றால், அதன் அமைப்பு முறையே அவ்வாறாகும். மனோன்மணியத்தில் வரும் பல பாத்திரங்கள் அனைத்தும் மனித இயல்பில் காணப்பெறும் குணப் பண்பை வடித்து எடுத்த பாத்திரங்களாகும். ஆகையினால், அதைப் படித்து இரசித்து அனுபவிக்க லாமே தவிர, நடிப்பதற்கு மிகமிகத் தொல்லை தரும். அதன் தனிச்சிறப்பு எது என்றால் இதுதான். முதன் முதலில் மேல்நாட்டு முறையில் தமிழ் நாட்டில் நாடகம் அமைக்க முடியும் என்பதை நிறுவினார் சுந்தரனார். ஒரு தோற்றம் ஒரு கரு, ஒரு வளர்ச்சி, ஒரு முடிபு என்ற முறையில் நாடகம் அமைக்க முடியும் என்றுதானே தனியாக நின்று எடுத்துக் காட்டினார். பழங்காலத்தில் எந்த நாடகத்திற்குப் போனா லும், "ஜயஜய கோகுல பால' என்று பாடிக்கொண்டு தான் முக்கியப் பாத்திரம் நுழைவார். மேலும், அரிச்சந்திர நாடகத்தில் இறந்து கிடக்கும் லோகிதாசன் மறுபடியும் எழுந்து பாடுகின்ற அந்தச்