பக்கம்:இன்றும் இனியும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 221 சூழ்நிலைதான் இருக்கும். இம்மாதிரி நாட்டில் இப்படி அழகான நாடக இலக்கணம் முற்றிலும் அமையப் பெற்ற ஒன்றை ஆக்கித் தர முடியும் என்று ஆக்கித் தந்த பெருமை அந்தத் தத்துவப் பேராசிரியருக்குரியது. தமிழ்நாடும் தமிழும் உள்ளவரையில் அந்தப் பெருமையை யாரும் எதுவும் செய்ய முடியாது. வினா எதிர்கால நாடகங்கள் எவ்வாறு அமைதல் வேண்டும்? r விடை எதிர்கால நாடகங்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்றால் நான் எதைச் சொல்ல முடியும்? பெர்னாட்ஷாவே எனக்குப் பிறகு 25 ஆண்டுகள்தாம் என் நாடகங்களுக்கு வாழ்வு' என்று சொல்லிச் சென்றார். ஏனென்றால், அன்றாடப் பிரச்சினைகளை நாடகப் பொருளாகக் கொண்டார். அந்தப் பிரச்சினை மாறிப்போனவுடன் நாடகமே உயிரிழக்கும். என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாட்டை என்போன்றவர்கள் ஒரு காலத்தில் பாடிப் பாடித் தொண்டையை இழந்தனர். அன்று மக்களைத் தட்டி எழுப்பிய அதே பாடலை இன்றைக்குப் பாடினால் யாரும் கேட்க மாட்டார்கள். ஏன்? அதனுடைய தேவை தீர்ந்து விட்டது. கவிச் சக்கரவர்த்தி பாரதி இந்தப் பாடல் ஒன்றால்தானா வாழ்கிறார்: பாஞ்சாலி சபதமும், குயில் பாட்டும், கண்ணன் பாட்டும் இருக்கிறவரையில் பாரதி வாழ்வாரே தவிர, இதுபோன்ற பாடல்களை மட்டும் பாடியிருந்தால் அவை குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் எவ்வளவு தேவைப்பட்டிருப்பினும் காலத்தை வென்று நிற்க முடியாது. , ,