பக்கம்:இன்றும் இனியும்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 9 223 ஆகவே, நாடகம் எப்படி அமையவேண்டும் என்றால், மனித இனத்திலே காணப்படுகின்ற குறை பாடுகளை எடுத்து விளக்குவதாக இருக்க வேண்டும். ஷேக்ஸ்பியர் எழுதிய எல்லா நாடகங்களும் வாழ்ந்து விடுவதில்லை. ஒரு சில நாடகங்கள், மனிதப் பண்பாட்டை வைத்து எழுதிய நாடகங்கள் வாழ்கின்றன. நாம் அமைக்கின்ற நாடகங்கள் வாழ்க்கையிலே என்றுமுள்ள பிரச்சினைக்கு வழிகோலுவதாக அமையவேண்டும். அப்படி அமைந்தால் அந்த நாடகம் இன்றல்ல, நாளையல்ல என்றும் வாழும். மனோன்மணியத்தைப் பற்றிப் பேசும்பொழுது அது நம்மையும் மீறி என்றைக்கும் இருக்கும் என்று கூறினேன். ஏன் தெரியுமா? நம் ஒவ்வொருவருள்ளும் ஒரு சிறு குடிலன் வாழ்கிறான். உண்டா இல்லையா நினைத்துப் பாருங்கள். உள்ளே கைவைத்துப் பாருங்கள். ஆக மொத்தம் அவர் குடிலன் என்ற பெயரில் நம்மிடமுள்ள வஞ்சத்தை எடுத்து விரிவாக்குகிறார்; அவ்வளவுதானே ஒழிய, வேறு இல்லை. வினா. எதிர்காலத் தமிழர் வாழ்வும் இலக்கியமும் எவ்வாறு அமைதல் வேண்டும்? விடை: இப்போது சொன்னவைதாம். அது உண்மையான இலக்கியமாக இருக்க வேண்டுமானால், அது இறவா வரம் பெற்றதாக இருக்க வேண்டு மானால், மனிதப் பண்பாட்டின் அடிப்படையில் தோன்றுவதாக இருக்க வேண்டும். அன்றாடப் பிரச்சினையையோ, அரசியலையோமட்டும் பேசி னால் அது வாழ்ந்துவிட முடியாது. அரசியல் மாறும்