பக்கம்:இன்றும் இனியும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ல் அ.ச. ஞானசம்பந்தன் பொழுது அதுவும் மாறிவிடும். ஆனால், மனிதப் பண்பை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் என்றும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கும். வினா: பாரதிதாசன் கவிதைகள் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? தற்காலக் கவிஞர்களையும் அவர்களின் கவிதைகளையும்பற்றித் தங்கள் கருத்து என்ன? - விடை: இவ் வினாவே தேவை இல்லை. நம் காலத்தில் மூன்றே கவிஞர்கள்தாம் உளர். ஒருவர் பாரதி. அடுத்தவர் பாரதிதாசன். மூன்றாமவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. இவர்கள் தவிர, எத்தனையோ பேர் கவிதை எழுதுகிறார்கள். இல்லை என்று சொல்வதற்கில்லை. அவருள் இருவர் போய் விட்டனர் (பாரதியும் கவிமணியும்) என்பது உங்களுக்கே தெரியும். + பாரதிதாசனுடைய கவிதைகளில் முதன் மூன்று தொகுதி, குடும்ப விளக்கு என்ற அந்தக் கவிதை களுக்கு இணையாக அவராலேயே பின்னர் எழுத முடியவில்லை. என் மனத்தில் பட்டதை, உள்ளபடியே நான் நம்புவதைச் சொல்லுகிறேன். அதில் கருத்து வேறுபாடு ஆயிரம் இருக்கலாம். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அந்த முதல் கவிதைத் தொகுதியைப் போலவோ, குடும், விளக்கைப் போலவோ ஏனைய நூல்கள் அமைய்வில்லை, இனி, &srajuá ágyáð (epic fragment) arging) சொல்லுகிறோமே அந்த முறையில் 'பாண்டியன் பரிசு’ அற்புதமாக அமைந்திருக்கிறது. இவை என்றைக்கும் நின்று நிலவக்கூடிய தகுதியுடையவை. அதே மாதிரி கவிமணி அவர்கள் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள்