பக்கம்:இன்றும் இனியும்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 225 எழுதினார்கள்; அவ்வளவுதான். ஆனால், மலரும் மாலையையும் ஆசிய ஜோதியையும்போல அவராலேயே பின்னால் எழுத முடியவில்லை. எந்தப் பெரிய கவிஞனுக்கும் அது வழக்கம்தான். கம்பன் 10,000 பாட்டுப் பாடினான் என்றால், 10,000மும் மணியாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள். அதில் ஓர் ஐயாயிரம் தேறும். சிறந்த பாடல்கள் பாதி என்றால், மீதிப் பாதியை ஒதுக்கிவிட வேண்டும் என்று கருத்தில்லை. சிறந்த பாடங்களுக்கு அடுத்த படியாக மற்றவை இருக்கும். அதேபோல பாரதிதாசன் கவிதைகளிலும் தொகுப்பு - குடும்ப விளக்கு - பாண்டியன் பரிசு என்ற அளவோடு சொல்லலாம். அவை சாகா வரம் பெற்ற கவிதைகள் என்று சொல்லி விட்டால் போதாதா? அதைவிட வேறு என்ன வேண்டும்? பாரதிதாசன் என்ற மனிதரை நம்பி அவை எதுவும் வாழவில்லை. பாரதிதாசனுக்குப் பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் அவை வாழமுடியும். அதே மாதிரி கவிமணி அவர்கள் இறந்துவிட்டதால் அந்த நூல்கள் அழிந்துவிடா, ஆசியஜோதியும் மலரும் மாலையும் எத்தனை ஆண்டுகளானாலும், தமிழன் என்று ஒருவன் இருக்கும்வரையில், அவனுக்குத் தமிழன்பு என்ற ஒன்று இருக்கும் வரையில் வாழும். தற்காலக் கவிஞர்களைப் பற்றியும் அவர்களின் கவிதைகளைப்பற்றியும் எதை எடுத்தாலும் உன் கருத்தென்ன? உன் கருத்தென்ன என்று கேட்பதைப் பார்த்தால் அச்சமாகத்தான் இருக்கிறது. தற்காலத்தில் கவிஞர்கள் இல்லாமலில்லை. பத்திரிகையில் பார்த்தீர் களானால் கவிதைகள் நிறைய வருகின்றன. எனக்குப் பிடித்தவர்கள் சிலர் என்று கூறுகிறேன். அவ்வளவு தான். அதனால் மற்றவர்கள் எல்லாம் கவிஞர்கள் இ.இ.-15