பக்கம்:இன்றும் இனியும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சிறந்த கவிதை சிறந்த கவிதை எது என்பதைக் கூறவந்த மேனாட்டுத் திறனாய்வாளர் 'மாத்யூ அர்னால்ட்' என்பார், "சிறந்த சொற்களை, சிறந்த முறையில் அடுக்கப் பெற்றதே சிறந்த கவிதையாகும் என்றார். அவ்வாறானால், சிறந்த கவிதைக்கு இரண்டு இலக்கணங்கள் தேவைப்படுகின்றன. முதலாவது, கவிதையில் பெய்யப்பெற்றுள்ள சொற்கள் சிறந்த சொற்களாக அமையவேண்டும். சொற்களுள், சிறந்தவை சிறப்பில்லாதவை என்று இருவகை உண்டா என்று வினவலாம். உண்மையாகவே, இருவகை உண்டு. நிறைந்த பொருள் ஆழம் பெற்று விளங்குகின்ற சொற்களை சிறந்தவை என்றும், பொருள். செறி வில்லாமல் ஒரேயொரு பொருளை மட்டும் தாங்கி நிற்கும் சொற்கள் சிறப்பு இல்லாதவை என்றும் கூறப்பெறும். கவிதையில் இடம்பெற வேண்டிய சொற்கள் மிகச் சிறந்த பொருள் செறிவுடன் விளங்க வேண்டும். அடுத்து, பொருள் செறிவுடைய சொற்களா யினும் சிறந்த முறையில் அவை அடுக்கப்பெற வேண்டும். இலங்கை சென்று பலவிடங்களிலும் தேடி, இறுதியாக, சீதையைக் கண்டேன்' என்று கூற வருகிறான் சொல்லின் செல்வனாகிய அனுமன்.