பக்கம்:இன்றும் இனியும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 ல் அ.ச. ஞானசம்பந்தன் அல்லர் என்று நான் சொல்வதாக நினைத்துவிட வேண்டா, மார்க்கஸ் அரேலியஸ் வாழ்க்கையை எடுத்தீர்களானால், அவருடைய உபதேசத்தைக் கற்க மனம் வராது. ஆனால், யாரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. மார்க்கஸ் அரேலியஸின் உபதேசத்தைப் படிக்கிறார்களே தவிர, அரேலியஸின் சொந்த வாழ்க்கையைப்பற்றி அவர்கள் கவலைப் படுவதே இல்லை. அதனாலேயே அந்தச் சமுதாயம் வளர்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இளங்கோவடிகள் துறவியாக இருந்த்ால் என்ன ? குடும்பஸ்தராக இருந்தால் என்ன? நாம் என்ன பெண்ணா கொடுக்கப்போகிறோம் அவருக்கு ? எதற்காக் அதுபற்றிக் கவலைப்பட வேண்டுமென்று கேட்கிறேன். புலவருடைய வாழ்க்கைமுறை - திரு வள்ளுவர் வேட்டி நெய்தாரா - துணியைக் கிழித்தாரா - இரண்டை நான்காகக் கிழித்தபோது கோபம் வந்ததா? இதைப் பற்றி அறிய நமக்கென்ன தேவை? குறள் தேவை - குறள் என்ற நூலிலிருந்து குறளாசிரியரையும், சிலம்பிலிருந்து அதன் ஆசிரியரை யும், அவர் பாடல்களிலிருந்து பாரதிதாசனையும் காண்டல் வேண்டும். எதை வைத்து ஒரு மனிதனை முடிவு செய்வது? பண்பாடு என்பதற்கும் பழக்க வழக்கங்களுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு கவிஞன் எதையாவது தின்று தொலைத்துவிட்டுப் போகிறான். பறப்பன, ஊர்வன, திரிவன இவற்றைத் தின்பதால் ஒருவனை மட்டமாக மதித்தல் தவறு. ஒரு சில மேனாட்டார் எல்லாவற்றையும் தின்றுவிடுகிறார்கள். பாம்பு, கன்றுக்குட்டி ஒன்றும் பாக்கி விடுவதில்லை. ஆனாலும், அவர்களிடத்திலே பார்த்த பண்பாட்டை மறக்கவே முடியவில்லை. அத்தகைய நிகழ்ச்சிகள்