பக்கம்:இன்றும் இனியும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 227 என்னுடைய கண்ணைத் திறந்து விட்டன என்று கூறலாம். உணவினாலும் உடையினாலும் ஒருவனை எடை போடுவது பெருந் தவறு. வினா. கல்வியின் எல்லா நிலைகளிலும் தமிழையே பயிற்சி மொழியாகக் கொள்வது நல்லதா? தமிழிலேயே எல்லாப் பாடங்களையும் கற்பிக்கலாமா? தனித்தமிழ்க் கலைச்சொற்கள் வேண்டுமா? வட மொழிக் கலைச்சொற்களை ஏற்பது பொருந்துமா? கலைச்சொல்லாக்கத்தில் எழுத்துப் பெயர்ப்பு (transliteration) povub luu 13;Glofr? விடை: எல்லாப்பாடங்களையும் கற்பிக்கலாமா தமிழிலேயே? கற்பிக்கலாமெனின், கலைச் சொற் களைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள் ? எனக்கொரு சின்ன கருத்து வேறுபாடு. இந்தக் கலைச் சொற்களை மொழி பெயர்க்கர்மல் அப்படியே வைத்துக் கொண்டால் நல்ம் என்று நினைக்கிறவன் நான். அதாவது அப்படி அப்படியே அது இலத்தின் மொழியாக இருந்தாலும் சரி, கிரேக்க மொழியாக இருந்தாலும் சரி, எந்த மொழியாக இருந்தாலும் சரி அப்படியே வைத்துக் கொள்வதிலே தவறு ஒன்று மில்லை. அப்படியானால் ஒரு பெரிய பாரம் குறையும். 'Hydrogen ஐ நீரகம் என்று படித்துவிட்டு அப்புறம் நீரகம் என்றால் Hydrogen என்று தெரிந்து கொள்ளக் கூடிய அளவுக்குச் சூழ்நிலை தோன்றுவதைக் காட்டிலும் அதை அப்படியே வைத்துக் கொள்வ்த னால் தவறில்லையோ என்று நினைக்கின்றேன். அது பெரியவர்கள் ஆராய்ச்சி செய்யவேண்டிய விஷயம். என்னைப் போன்ற ஒருவனுக்கு அதில் ஒன்றும் வேலையில்லை. ஆனால், பெரியவர்கள் என்ன