பக்கம்:இன்றும் இனியும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 அ.ச. ஞானசம்பந்தன் அதைப்பற்றி சொல்லுகிறார்கள் என்று அறிய மிகச் சிரமப்பட்டேன்; இப்போது - மத்திய அரசின் ஆட்சி மொழிக் கழக அறிக்கையை மொழி பெயர்க்கத் துவங்கியுள்ளேன். இவர்களா பெரிய மனிதர்கள் என்ற சந்தேகம் வந்து விட்டது எனக்கு. ஏனென்றால், அவ்வளவு குழறுபடி செய்து வைத்திருந்தார்கள் அந்த நூலில். ஆளுக்கொரு கருத்து. 600 பக்கம் எழுதுவதற்குள் 600 கருத்து வேற்றுமை அதற்குள்ளே, கலைச்சொல் ஆக்கம் செய்ய வேண்டும் என்று நினைக்கையிலேயே என்ன ஆகிறது? தகராறுதான் முன்னர் நிற்கிறது. s இந்த மொழியில் அந்தச் சொல்லை எப்படிப் போடுவது என்பது போன்ற உபத்திரவத்திற்கு முற்றுப் புள்ளி வைத்ததைப்போல எதை வேண்டுமானாலும் எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், கலைச்சொற்களை அப்படியே சொல்லி விட வேண்டும். கார்பைடைக் கார்பைடு என்றே எழுதலாம். அந்த 'டு எழுதுவதற்கு நம்மிடம் எழுத்து இல்லையானால் அடியில் கோடு, மேலே கோடு எதையாவது போட்டு வேண்டுமானாலும் எழுதி விடலாம்; அதில் ஒன்றும் தவறு இல்லை. அந்த அளவுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்வதினாலே தவறில்லை என்று நினைக்கிறேன். அது என்னுடைய சொந்தக் கருத்து: அவ்வளவுதான். எழுத்துப் பெயர்ப்பு நலம் பயக்கும் என்பதை அன்றாட அனுபவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறவன் நான். எதையும் படிக்க முடியும். ஆகையினாலே, transliteration செய்வதனாலே தவறு ஒன்றுமில்லை. அது மட்டுமன்று; கொஞ்சம் லாபம் கூட அதில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; இனி நாம் இங்கே