பக்கம்:இன்றும் இனியும்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 9 229 படித்துவிட்டு மேல்நாடு அல்லது வடநாடு அல்லது தென்னாடு என்று போகிறோமென்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லாருக்கும் ஒன்றாக இந்தக் கலைச் சொற்கள் இருக்குமேயானால், அதனால் நமக்கு நன்மை தானே தவிரத் தீமை ஒன்றும் இல்லை. அப்படிச் செய்வதால் தமிழில் அச் சொற்களைக் கொண்டுவர வேண்டா என்று சொல்லவில்லை. Major axis, minor axis ஆகியவற்றை நெட்டாயம் குட்டாயம் என்று மொழி பெயர்த்ததை நான் வரவேற்கிறேன். மிக மகிழ்ச்சி அடைகிறேன். எவ்வளவு அழகாக 'Minor axis ஐக் குட்டாயம் என்றும், 'major axisd' ஐ நெட்டாயம் என்றும் செய்தார்கள் என்று மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் குட்டாயம் என்றுதான் சொல்லவேண்டும் என்று வலியுறுத்துவதை நான் விரும்பவில்லை. அப்படிச் சிலர் - அந்த வன்மை உடையவர்கள் - இரண்டு மொழியிலும் வன்மையுடையவர்கள் - விஞ்ஞானத் துறையிலும் துறைபோகியவர்கள் அழகாக இப்படிப்பட்ட சொற்களை ஆக்கித் தரட்டும்; வைத்துக் கொள்வோம். ஆனால், எல்லாரும் இதனைத் தான் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கட்டாயப் படுத்தத் தேவையில்லை. அதனாலே தொல்லை யில்லாமற்போய்விடும். எளிதாகவும் கற்றுக் கொள் கிறோம். பிறகு - நல்ல அனுபவம் முற்றியபிறகு நம்முடைய மொழியிலேயே சொல்ல முடியுமா என்றால் முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இதனைச் சொல்லிவிட்டேன். ஜப்பானிய நாடு, ரஷ்ய நாடு இரண்டும் தாம் இப்போது நமக்கு எடுத்துக் காட்டாக இந்தத் துறையில் அமைந்துள்ளன. ஜப்பானிலே நூற்றுக்கு 85 பேர் ஜப்பானிய