பக்கம்:இன்றும் இனியும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 ல் அ.ச. ஞானசம்பந்தன் மொழியைத் தவிர வேறு ஒன்றும் தெரியாதவர்கள் என்பதை மறந்துவிட வேண்டா. மிகச்சிறந்த விஞ்ஞானிகளாக இருக்கின்ற அத்துணைபேரில் பலர் ஜப்பானிய மொழியைத் தவிர வேறு ஒரு மொழியும் தெரியாதவர்கள். அந்த ஜப்பானிய மொழியிலேயும் சின்டோ மொழி ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் தெரியாதவர்கள். என்றாலும் அவர்கள் அத்தனை பேரும் விஞ்ஞானிகளாக இருக்கின்றார்கள். அப்படி இருக்கின்ற அந்த ஜப்பானியர்கூடக் கலைச் சொற்களைப் பொறுத்தமட்டில் அப்படியேதான் வைத்திருக்கிறார்கள். வினா. தமிழ் நெடுங்கணக்கு இன்றைய வரி வடிவத்தையே முன்னரும் பெற்றிருந்ததா? இன்றைய நிலையில் மாற்றம் ஏதேனும் தேவையா? விடை: தமிழ் நெடுங்கணக்கு இன்றைய வரி வடிவத்தையே முன்னரும் பெற்றிருந்ததா? இல்லை என்று நன்றாக உங்களுக்கெல்லாம் தெரியும், காலாந்தரத்தில் மாறி வந்தது. தொல்காப்பியர் காலத்திலிருந்த வரிவடிவம் எவ்வளவோ மாறி விட்டது. அவ்வளவு போவானேன்? கொஞ்ச காலத்திற்கு முன்னே வாழ்ந்த பெஸ்கி முதலானவர் காலத்தில் இருந்த எழுத்து முறைகூட இப்பொழுது கிடையாது. மாறி விட்டது, அதில் ஒன்றும் ஆச்சரிய மில்லை. இன்றைய நிலையில் மாற்றம் ஏதேனும் தேவையா? இப்பொழுது சொன்னேனே, சில கலைச் சொற்களைத் தெரிவிப்பதற்குரிய சில ஒசைகள் இல்லை என்று; அந்த ஒசைகளைத் தரக்கூடிய சில எழுத்துகளை ஆக்கிக் கொள்வதனால் மிக வசதியாக ஆகிவிடும்; அவ்வளவுதான்.