பக்கம்:இன்றும் இனியும்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் , 231 வினா: யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்ற வரிகளில் 'கம்பர்ைப்போல் எனப் பாரதியார் பாடியிருக்க மாட்டார்; காப்பியர்போல் என்றுதான் பாடி யிருப்பார் - இவ்வாறு ஒர் அறிஞர் கூறுவதுபற்றித் தங்கள் கருத்து யாது? விடை: ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப்போல் என்றதை ஒருவர், அதைக் கம்பனைப்போல் இல்லை, காப்பியர் போல் என்று சொல்லுகிறாரே. நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்கிறீர்கள். ஏன்? சொல்லுகிறவர்களை யல்லவா கேட்கவேண்டும்? என்னைக் கேட்டு என்ன பயன்? நான்தான் பாடும்போதே கம்பனைப்போல் என்று பாடுகிறேனே. போதுமா உங்களுக்கு? சொல்லு வோர். ஏதோ அவர்கள் கருத்தில் பட்டதைச் சொல்லு கிறார்கள். அதைப்பற்றி எனக்கு என்ன கவலை? நான் என்ன நினைக்கிறேன் என்கிறீர்களா? அவர்கள் கூற்றை நான் நம்பவில்லை. காப்பியர்போல் என்றுதான் பாடியிருப்பார் என்று அவர் எப்படி உறுதியாக நம்புகிறாரோ? அதுபோல நான் உறுதியாகக் கம்பனைப்போல் என்றுதான் பாடி யிருப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால், கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்' என்று பின்னரும் பாடுகிறான். அதுமட்டுமன்று; அந்தக் காப்பியத்திலே அவன் ஊறித் திளைத்திருக்கிறான். அதற்கு ஓர் எல்லையே இல்லை. அப்படி ஊறித் திளைத்திருப்ப தால்தான் பாஞ்சாலி சபதத்தை ஆழ்ந்து படித்துப் பார்ப்பீர்களானால், எவ்வளவு தூரம் கம்பனில் பாரதி ஈடுபட்டிருக்கிறான் என்பது தெரியும். கம்பன்