பக்கம்:இன்றும் இனியும்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 ல் அ.ச. ஞானசம்பந்தன் என்றொரு மானிடன் என்று பாடினானே. அதையே அவனுடைய வியப்புக்கு ஒர் எல்லையாகக் கொண்டு வந்து விட்டான். இது மனித யத்தனத்தில் முடியுமா என்று சொல்லுகிறோமே அதுபோல ஆச்சரியப் படுகின்றான். யார்? ஒரு கவிஞன்தான் இன்னொரு கவிஞனை அனுபவிக்க முடியும். நாம் என்ன கண்டோம்! சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் (கம்பன்) என்று பாடினானே, அதை யார் அனுபவிக்க முடியும்? 'பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடல் வேண்டும், 'பராசக்தி' என்று பாடினானே (பாரதி) அவன்தான் அனுபவிக்க முடியும். அவன்தான் அந்தச் சக்தியை உள்ளவாறு அறிய முடியும். வினா: பண்டைக் காலத்தில் சான்றோரைக் குறித்த ஐயர் என்ற சொல் இன்று குறிப்பிட்ட ஒரு சாதியாரை மட்டும் குறிப்பது ஏன்? - விடை: மொழி நூல் படித்தவர்களுக்குச் சில உண்மைகள் தெரிந்திருக்கலாம். சில சொற்கள் இப்படிக் காலாந்தரத்தில் மாறி வேறு ஒன்றைக் குறிப்பதும் உண்டு. களி என்ற சொல்லைப் பாருங்கள். 'என்ன மிகவும் களிப்புடன் இருப்பதைப் போல் தெரிகிறதே? என்று இப்போதுகூடச் சில மாவட்டங் களிலே சொல்லுவார்கள். 'களிப்புத் தாண்டவமாடு கிறது முகத்திலே என்பார்கள். வள்ளுவன் காலத்தில் இச் சொல்லைச் சொன்னால் பொருளே வேறு. குடித் திருப்பவனையே இச்சொல் குறித்தது. களித்தானைக் காரணம் காட்டுதல் என்று ப்ாடுவார் வள்ளுவர். வள்ளுவர் காலத்தில் 'ஐயா மிகவும் களிப்புடன் இருக்கிறார் என்றால், கள்ளுக்கடைக்குப் போய்