பக்கம்:இன்றும் இனியும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 அ.ச. ஞானசம்பந்தன் ஐயரே அம்பலவர் அருளால் இங்க ணைந்தோம் வெய்ய அழல் அமைத்துமக்குத் தரவேண்டி ‘ஐயரே" என்று கூப்பிடுகிறவர் யார்? இன்றைக்கு உங்களால் ஐயரென்று சொல்லப்படுகிறவர், கூப்பிடப் பட்டவர் யார்? மறந்தும் ஐயரென்று சொல்லப் படாதவர். பாடுகிறவர் யார்? அமைச்சர் பெருமான் சேக்கிழார். அடுத்த ஒர் ஐயர், திருஞானசம்பந்தர். அவர் ஐயர் என்று அழைக்கிறார். யாரைத் தெரியுமா? திருநீலகண்ட யாழ்ப்பாணரை ஐயர், நீர் உளமகிழ இங்கணைந்த உறுதியுடையோம்' என்று பேசுகிறார். பெரிய புராணத்திலே வந்த முதல் ஐயர் கண்ணப்பர்; இரண்டாம் ஐயர் திருநாளைப்போவார். மூன்றாம் ஐயர் யாழ்ப்பாணர். ஆகையினால், இந்தச் சொல்லுக்கு இதுதான் பொருள் என்பதை அறிய முடியும். மதிப்பால் உயர்ந்தவர்களை, நம்மால் மதிக்கத் தகுந்தவர்களை ஐயர் என்கிறோம். அது பிறப்பால் வந்ததன்று. 'புலனழுக்கற்ற அந்தணாளன்' என்று பேசப்படுகிறானே கபிலன். அதைப்போல அந்த ணாளர்கள் இருந்திருக்கலாம். யார் இல்லை என்று சொல்ல முடியும்? நல்லவர்களாக இருந்தவர்களை யெல்லாம் செந்தண்மை பூண்டு ஒழுகிய காரணத் தினாலே ஐயர் என்று அழைத்திருக்கலாம். இப்போது கூடப் பணக்காரன் மகன் பணக்காரன்தானே? அதை மட்டும் மறந்துவிடுகிறீர்களே! இந்த ஐயர் என்ற வார்த்தைக்கு மட்டும் சண்டைக்கு வருகிறீர்களே! பணக்காரனாக இருந்து இன்று வறுமையுற்றிருப்பினும் இன்றுகூட அவனைக் கண்டவுடனே, என்ன முதலாளி என்கிறார்கள். ஓர் அமைப்பை (Institution) ஏற்படுத்தி விட்டால் பின்னர் அதனை அழிக்க முடியாது. இது இந்த நாட்டில் மட்டுமன்று எல்லா