பக்கம்:இன்றும் இனியும்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 235 நாட்டிலேயும் இதுதான் வழக்கம். ஓர் அமைப்பை ஏற்படுத்திவிட்டீர்களானால் அதில் நல்லவனும் வருவான் கெட்டவனும் வருவான். அமைப்பு என்று தொடங்கினால் வரும் தீங்கு இதுதான். பிற சமயத்தைப்பற்றி நான் இப்போது சொல்ல வரவில்லை. நம் சமயத்தையே எடுத்துக் கொள்ளுங் கள். ஒவ்வொரு சமயத்தாரும் மனத்தில் கைவைத்துப் பார்த்தால் நான் கூறுவது உண்மை என்பது தெரியும். ஞானசம்பந்தர் எங்காவது மடம் கட்டினாரா? திருநாவுக்கரசர் மடம் கட்டினாரா? இன்றைக்கு எத்தனை மடங்கள் இருக்கின்றன? எங்கேயாவது நல்லது இருக்கிறதா? நல்லது என்றால் நல்ல பாம்பு அன்று, நல்ல பண்பாடு என்று கேட்கிறேன். ஏன்? அவர்களுக்குத் தெரியும் அமைப்பு என்ற ஒன்றை உண்டாக்கினால் அது நாளாவட்டத்தில் குட்டிச் சுவராகப் போய்விடும். சமுதாயத்தில் மதிக்கத் தகுந்தவர்கட்கு வழங்கப்பெற்ற பட்டம் நாளா வட்டத்தில் சாதிப் பெயராயிற்று. வினா. ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை என்று தமிழின் தோற்றத்தைப் பாடுகிறார் பாரதியார். சிவனிடமே தமிழ் பிறந்ததா? அப்படித் தோன்றி யிருந்தால், அதுவரை மனிதரால் பேசப்படாத ஒரு மொழிக்கு அகத்தியன் என்னும் மனிதன் எப்படி இலக்கணம் செய்ய முடியும்? - விடை ஆதிசிவன் பெற்றுவிட்டான் - வேடிக்கையான கேள்வி. எல்லா மொழியையும் அப்படித்தான் சொல்லுவார்கள். அவரவர் மொழியை அவரவர் அப்படி உயர்ந்தது என்று சொல்வதில் தவறு ஒன்றுமில்லையே. ஆதிசிவன் பெற்றுவிட்டான்