பக்கம்:இன்றும் இனியும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அ.ச. ஞானசம்பந்தன் ஆனால், சீதையைப் பற்றிப் பெருந்துயர் எய்தி நிற்கும் இராமன் முன்னா, நீண்டதொரு சொற்பொழிவு செய்து, இறுதியாக, 'சீதையைக் கண்டேன்' என்று கூறுவது சாதாரணமாகச் சொற்களை அடுக்கும் முறையாகும். ஆனால், சிறந்த முறையில் இதை ஆடுக்கு வேண்டுமானால், கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்' என்று கூறுவதே சிறந்த முறையாகும். இலக்கண முறைப்படி பார்த்தால், ‘கற்பினுக்கு அணியைக் கண்களால் கண்டனன் என்றே கூறி இருக்க வேண்டும். இம் முறையை விட்டுவிட்டு, 'கண்டனன் என்ற சொல்லை முதன் முதலில் பெய்வதே சிறந்த முறையில் சொற்களை அடுக்குவது ஆகும். எனவே, கவிதை சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் அடுக்குவதால் பெறப்பெறுகின்ற ஒன்றாகும். - கோதைப் பிராட்டியாரின் பாடல்களுள், தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம்கமழத் துயில்அணைமேல் கண்வளரும் மாமீன் மகளே மணிக்கதவம் தாள்திறவாய் (திருப்பாவை) என்ற பாடல் ஒன்றாகும். இப் பாடலுள் தலைவி உறங்குகின்ற வீட்டின் பெருமை முதல் அடியில் பேசப் பெறுகிறது. வீடோ ஒளிபொருந்திய மணிமாடம். அந்த வீட்டிலும் சுற்றும் விளக்கு எரிகின்றதாம்; நல்ல நறுமணம் வீசும் வாசனைப் புகையும் மனம்வீசி நிற்கின்றது. ஏற்கெனவே ஒளி பொருந்திய மாடத்துக்கு மேலும் ஒளியூட்டுவதற்காகச் சுற்றும் விளக்கெரிய என்று கூறுகிறார் ஆசிரியர். அனைவரும் உறங்குகின்ற * கம்பராமாயணம் - 6031 -