பக்கம்:இன்றும் இனியும்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ல் அ.ச. ஞானசம்பந்தன் என்னை என்று சொன்னால் அதில் என்ன தவறு? ஆனால், அதேமாதிரி இன்னொன்று பாடினானே, 'தொன்று நிகழ்ந்ததனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் - என்று அது மறந்து விட்டதா இந்தக் கேள்வி கேட்கும்போது என்று கேட்கின்றேன். 'கல்லிவர்ஸ் டிராவல்ஸ் என்ற நூலை ஒருவர் எழுதவில்லையா? இதைப் படித்தவுடன் கஜக்கோலை எடுத்துக்கொண்டு எங்கே ஐயா இருக்கிறான் அந்தப் பெட்டகோனியன் - எங்கே இருக்கிறான். அந்த லில்லிபுட்டன்' என்று எந்தப் பிரகஸ்பதியாவது அளக்கப் போவானா? என்னே பைத்தியக்காரத்தனம் இது! அது ஒரு குறியீட்டுச் சொல். பெட்டகோனியனைச் சொல்லும்போது என்ன பண்பாட்டைச் சொல்லுகிறான் அவன்; பத்துத் தலை இராவணனைச் சொல்லும்போது என்ன பண்பாட்டைச் சொல்லுகிறான் அவன் என்றுதானே தெரிந்து கொள்ள வேண்டும். சின்னப் பாப்பாக்களுக்குக் கதை சொல்லும் போது, 5 மாம்பழம் வைத்திருக்கிறாய் - 2 மாம்பழத்தைத் தின்றுவிட்டால் - 3 மாம்பழம் மிச்சம் என்று சொல்லும்போது, மாம்பழத்தைக் காணோமே என்று குழந்தை கேட்கிறது. இவ்வளவு பெரிய பிள்ளையாக வளர்ந்த நீங்கள் படிக்கும்போது, அதேமாதிரி மாம்பழம் ஒன்று, இரண்டு என்று எண்ணுவது உண்டா? அந்த இளம் பருவத்தில் சைன் தீட்டா - காஸ் தீட்டா சொல்லிக் கொடுத்தால் பிள்ளைக்கு ஒன்றும் புரியாது. 5 மாம்பழம் - இது ஒன்று, இது ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். வளர்ந்து அப்புறம் மறுபடியும் மாம்பழக் கணக்கே