பக்கம்:இன்றும் இனியும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 237 போட்டுக் கொண்டிருக்கலாமா? அதுவும் தேவை; இதுவும் தேவை. அந்தமாதிரி சில இருக்கின்றன. கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தான் - அனைத்தும் இறைவனுடைய படைப்பு என்று ஒத்துக் கொள்ளும்போது, மொழியிலே மட்டுமென்ன கோளாறு வந்துவிட்டது என்று கேட்கிறேன். அதை மறுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எல்லாம் படைக்கப்பட்டவை. மொழி மட்டும் தானாகக் குதித்ததோ? அதுவும் படைக்கப்பட்டது தான். கவிஞனுக்கு 'ஆதிசிவன் பெற்றுவிட்டான்' என்று கூறுவதற்கு விருப்பம் என அறிகிறோம். அது சிவனிடம் தோன்றியதோ, அன்றி யாரிடம் தோன்றி யதோ? ஏன் அவ்வளவு கோபம் என்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை. சிவம் என்றால் என்ன? நிலைச்சக்தி (Potential energy) எனலாம். சக்தி என்று சொன்னால் இயங்கு சக்தி (Kineticenergy) எனலாம். எல்லாச் சடமும் (Matter) சக்தியாக (Energy) மாறலாம் என்று இன்றைய அறிவியல் கூறவில்லையா? E = Mc" என்பதை மறக்க வேண்டா. ஆனால், E = Me” என்பதை ஐன்ஸ்டின் மட்டுமே கண்டு கூறினார் என்று நினைக்காதீர்க்ள். 'சிவம் - ஜடம், அது இயங்கவே இயங்காது. ஆனால், தொழிற்படுமானால் 'காயில் உலகனைத்தும் கற்பொடிக் காண்’ என்று பாடினார் மணிவாசகர். சக்தி வெளிப்படும்போது அதனை இயங்காற்றல் (Kinetic) என்றும், சும்மா இருக்கும்போது நிலையாற்றல் (Potential) என்றும் கூறுகிறோமன்றோ? சடம் (Matter) சடமாகவே இருக்கும்போது சிவம் என்று சொன்னார்கள். சக்தியாக (Energy) வெளிப்படும்