பக்கம்:இன்றும் இனியும்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 ல் அ.ச. ஞானசம்பந்தன் போது சக்தி' என்று சொன்னார்கள். இரண்டும் பிரிக்கமுடியாதபடி ஒன்றையொன்று பற்றியுள்ளன. இவளும் அவனைவிட்டுப் பிரிவதில்லை; அவனும் இவளைவிட்டுப் பிரிவதில்லை. என்றாவது சக்தி சிவத்திலிருந்து பிரியுமேயானால் உலகம் கற்பொடி யாகிவிடும் என்று சொன்னான். ஆகவே, சிவனிடம் தமிழ் பிறந்தது என்று கூறுவதில் தவறில்லையே. "அப்படித் தோன்றியிருந்தால், அதுவரை மனிதரால் பேசப்படாத ஒரு மொழிக்கு அகத்தியன் என்னும் மனிதர் எப்படி இலக்கணம் வகுத்தார்?' என்பது உங்கள் துணைவினா. யாரோ ஒருவன் ஒரு மொழியைப் பேசிக்கொண்டிருந்தான் வரம்பு கட்டா விடில் மொழி என்ன ஆகும் என்பது தெரியுமல்லவா? ஒரு சிறிய உதாரணத்தைக் காணலாம். சென்னை யில் உள்ள ரிக்ஷா இழுப்பவர், 'பலான எடத்துக்குப் போவணும் ன்னு சொன்னால்தானையா தெரியும். நீ பாட்டுக்கு ஏறி உட்கார்ந்துட்டீயே; எங்கே போகிறது?" என்பார். 'பலவான இடத்திற்கு என்றால் என்ன பொருள்? ஒன்றுக்கு மேற்பட்டதுதானே பல என்று நாம் படித்திருக்கிறோம். ஆகவே, பலான இடத்திற்குப் போக வேண்டுமென்றால், குறிப்பிட்டது அல்லாத என்று பொருள் கொள்ள வேண்டும். ஆனால், அவன் என்ன கருத்தில் பேசுகிறான் தெரியுமா? 'குறிப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டும் என்று சொன்னால் தானே எனக்குத் தெரியும் என்பதே அவன் கருத்து. குறிப்பிட்ட என்ற பொருளில் அதற்கு நேர்மாறான பொருள் தரும் பலவான என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான். இந்தச் சொல்லுக்கு இதுவே பொருள் என யார் கூறினர்? ஏதோ நாமாக ஒரு பொருளை ஒரு சொல்லுக்குக் கொடுத்து விட்டோம்.