பக்கம்:இன்றும் இனியும்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 அ.ச. ஞானசம்பந்தன் ஆராயுமுன் அந்த நூலாசிரியன் காலத்தை ஓரளவாவது அறியவேண்டும். பொதுவாக, குறைந்த பட்சம் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதாவது தெரிந்திருந்தால்தான் அந்த நூலை உள்ளவாறு நாம் அறிய முடியும்; அதை அனுபவிக்கவும் முடியும். அப்போது அதில் குறை காணவும் முடியாது. இன்றைக்கு நம்மிடம் இருக்கும் கருத்து மாறுபாடு களைக் கொண்டு போய் அந்நூலில் ஏற்றிக் காண்பது தவறு. வினா. ஜ, ஷ, ஸ, ஹ, r முதலிய வடமொழி எழுத்துகள் தமிழ் மொழியிலிருக்கின்றன. இவற்றை நீக்கிவிட்டுத் தமிழைத் துய்மைப்படுத்த வேண்டாவா? விடை இவ் வினாவின் அமைப்பு முறையே சற்று வேடிக்கையாக இருக்கிறது. நீக்க வேண்டுமா, நீக்க வேண்டாவா என்று என்னைக் கேட்பதை விட்டு, நீக்கி விட்டுத் துய்மைப்படுத்த வேண்டாவா என்று கேட்டுள்ளிர்கள். நீக்க வேண்டா என்று நான் சொன்னால், தமிழைத் துய்மைப்படுத்த வேண்டா என்று பொருள்படும். நீக்காவிடின் ஏற்படுவது து.ாய்மையா, தூய்மையின்மையா என்பதைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று தேவை. நம்முடைய பண்பாட்டை இழக்காமல் பிறவற்றைச் சொல்லக்கூடிய சக்தி நமக்கு வேண்டுமென்று முதலில் கலைச்சொற்களைப் பற்றிப் பேசும்போது சொன்னே னல்லவா? அந்த முறையிலே இந்த எழுத்துகளை வைத்துக் கொள்ளலாம். அதனாலே தவறு ஒன்று இருக்கிறதாக நான் கருதவில்லை. எவ்வளவோ கருத்துகளைத் தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படப் போகின்றது. அந்தச் சூழ்நிலை வரும்