பக்கம்:இன்றும் இனியும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றும் இனியும் 241 பொழுது மிக மிகத்தேவைப்படும் இந்த எழுத்துகள். ஆங்கிலத்திலேயே ஏதாவது சேர்க்கலாமா என்று நினைக்கிறார்கள். ஷா அதற்காக ஒரு பெரிய இயக்கமே துவக்கினார். நாம் இனி வளருகின்ற சமுதாயத்தினர். எவ்வளவோ கருத்துகளை வெளியிட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். மிக மிக இன்றியமையாத இத்தகைய இரண்டு மூன்று எழுத்துகள் இருப்பதால், குற்றம் என்ன? தொல் காப்பியன் முதற்கொண்டு பிறமொழி எழுத்துகளை ஏற்றுக் கொண்டுள்ளான்; ஆனால், இரு மொழிகளிலு முள்ள எழுத்துகளைக் குழப்பிக்கொள்ளாமல் எவ்வாறுபயன்படுத்த வேண்டுமென்று அவனே இலக்கணம் கூறுகிறான். வட சொற்கிளவி வட எழுத்து ஒரீஇ வந்து பயன்படும் என்று கூறுகிறான். 'க' ஒன்றுதான் உண்டு. ஆனால், மெல்லினத்துப் பின்னர் வரும் 'க'வை 'க' என்று உச்சரிக்க முடியாது தமிழில். பங்கயம் என்று சொல்லுகிறோமா இல்லையா? பங்(க்)கயம் என்று யாரும் சொல்லுவது கிடையாது. அதே மாதிரி வட எழுத்துகள் தமிழிலே வந்து வழங்கும்பொழுது தமிழ் வடிவத்தைப் பெற்று விட்டன. பங்கயம் என்றுதானே சொன்னான் ? . குங்குமம் என்றுதானே சொன்னான்? குங்(க்குமம் என்று சொல்லவில்லையே. எனவே, அந்த ஒசை இயல்பாக வந்து விட்டது. தெலுங்கும் மலையாளமும் இன்றைக்கு வடிவமே இல்லாமற் போய்விட்டன. 100-க்கு 99 வடமொழியாய்ப் போய்விட்டன. ஏன் தெரியுமா? ஒரு தப்புச் செய்தார்கள் அவர்கள். இந்த வடசொற்களையோ அல்லது வடவெழுத்துகளையோ அல்லது வட மொழியையோ எடுத்துப் பயன்படுத்தும் போது நமக்கு ஏற்றபடி அதை மாற்றியோ சிதைத்தோ இ.இ.-16