பக்கம்:இன்றும் இனியும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 அ.ச. ஞானசம்பந்தன் பயன்படுத்தியிருந்தால், தொல்லை இல்லாமற் போயிருக்கும். தமிழன் அப்படித்தான் செய்தான். அதுபோலப் பயன்படுத்தினால் எந்தவிதமான அச்சமும் வேண்டுவதில்லை; எச் சொற்கள் வந்தாலும் சரி, கவலையே பட வேண்டியதில்லை. ஆகவே, இவற்றை நீக்கிவிட்டுத் தமிழைத் தூய்மைப்படுத்துவ தென்றால், தூய்மை இரண்டு வகைப்படும். சுத்தமாக வீட்டில் இருக்கும் சாமான்களையெல்லாம் வெளியில் போட்டாலும் போடலாம்; மேசை இருக்க வேண்டிய இடத்தில் மேசை, நாற்காலி இருக்க வேண்டிய இடத்தில் நாற்காலி, ரேடியோ இருக்க வேண்டிய இடத்தில் ரேடியோ என்று அவற்றை வைத்தும் சுத்தமாகத் துடைத்து வைத்திருக்கலாம். அதுவும் தூய்மைதான். எந்தத் துய்மையை நீங்கள் விரும்பு கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கொஞ்சம் பழைய ஆள். எனக்குத் துாய்மை எது என்றால், மேசை இருக்க வேண்டிய இடத்தில் மேசை இருக்க வேண்டும்; அதன்மேலே காலணியைக் கழற்றி வைக்கக்கூடாது. அதன்மேலே புத்தகம்தான் இருக்க வேண்டும். ரேடியோவின் இடத்திலே ரேடியோதான் இருக்க வேண்டும். அதே மாதிரி பெட்டி இருக்க வேண்டிய இடத்தில் பெட்டி இருக்க வேண்டும். இதன்மேலே வேறு எதாவதைத் தூக்கி வைக்கக் கூடாது. எனவே, தூய்மை என்ற சொல் அவரவர் கருத்துப் போலப் பொருள்தரும். ஆகையினால், தமிழைத் தூய்மைப் படுத்த இவற்றையெல்லாம் தூக்கிக் கொண்டுபோய் வெளியில் போட்டுவிட்டு வரவேண்டுமென்பதில்லை. வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்; அவ்வளவுதான். -