பக்கம்:இன்றும் இனியும்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 சமயமும் தமிழும் இப் பரந்த உலகிடைத் தோன்றிய மனிதன் தான் வாழும் சூழ்நிலைகட்கேற்பப் பல்வேறு மொழிகளைத் தோற்றுவித்தான். அவற்றுள் சில நன்கு வளர்ச்சி யடைந்துள்ளன. அச் சிலவற்றுள்ளும் உயர் தனிச் செம்மொழி என்று கூறத்தக்க வகையில் மிகமிகச் சிலவாய மொழிகள் சிறப்படைந்துள்ளன. தலையாய அவற்றுள் ஒன்று இத் தமிழ்மொழி. தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம். தமிழ்த்தாய். இவளை ஒத்த மேம்பாடுடைய பிற மொழிகளிற் காணப்பெறாத சிறப்பொன்றை இப் பெருமாட்டி பெற்றுள்ளாள். அம் மொழிகளில் உள்ள இலக்கியங்களுள் சில சமய இலக்கியங்களும் உண்டு; ஆனால், இவளிடைத் தோன்றிய அனைத்துமே சமய இலக்கியங்கள்தாம். சமய இலக்கியம் என்று கூறியவுடன், தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்தங்களை மட்டுமே இன்றை நாள் மக்கள் சிலர் நினைக்கின்றனர். அக் கருத்துச் சரியானதன்று. சமயம் என்றால் என்ன? சமைக்கப்பட்டது சமயம். மனிதன் தன் வாழ்வு வளம் பெறவும், மாக்கள் தன்மையிலிருந்து விடுதல்ை பெற்று மக்கள் தன்மை