பக்கம்:இன்றும் இனியும்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ல் அ.ச. ஞானசமபநதன் பெறவும் வழியாகச் செய்யப்பட்டது அல்லது சமைக்கப்பட்டதுதான் சமயமாகும். வேறு வகையாகக் கூறுமிடத்து, மனிதனைப் பண்பாடுடையவனாக ஆக்குவது சமயம். சமய வாழ்வு இன்றேல் மனிதன் ஆறறிவு படைத்தவன் என்று பெருமைப்படுவது வெற்றுரையாய் முடியும். பல்வேறு வகையான காட்சி நல்கும் இப் பரந்த உலகையும் அதில் உள்ளவற்றையும் காணும் ஒருவன், இவ் வேற்றுமையில் மயங்காமல், இவற்றிடையே ஓர் ஒற்றுமையைக் காண முயல்கிறான். இவ்வொற்றுமையைக் காண முற்பட்ட அவன் அனைத்திற்கும் ஆணிவேராய் அமைந்த ஒன்றை அறிகிறான். தன் நுண்மாண் நுழை புலத்தால் ஆய்ந்து செல்லும் அவன் அவ்வறிவுக்கு அப்பாற்பட்ட பொருள்கள் உண்டு என்பதையும் அவை அனைத்தும் ஒரு வரன்முறைக்குட்பட்டு இயங்குவதையும் காண்கிறான். - விஞ்ஞானியும் இதே காட்சியைக் காண்கிறான் எனினும், அவ் வரன்முறை பற்றிய ஆய்விலேயே தன் முழுக்காலத்தையும் செலவிட்டு விடுகிறான். மெய்ஞ் ஞானி வரன்முறையின் தோற்றத்திற்கு ஒரு கருத்தா இருத்தல் வேண்டும் என்ற முடிபில் ஒன்றி விடுகிறான். இவ்வெண்ணமே சமய வாழ்வின் அடிப்படையாய் அமைந்துவிடுகிறது. சமயம் வெறும் குறிகளும் அடையாளமும் அன்று; சமயம் என்பது இவற்றைக் கடந்து நிற்பது. குறிகள், அடையாளங்கள் ஆகிய ஒன்றையும் போற்றாமலே சிறந்த சமயவாதியாக வாழ முடியும். இவை அனைத்தையும் மேற்கொண்டும் சமய விரோதியாய் வாழ முடியும். மனித இனத்தின் மாசை அகற்றி, பண்புடையவனாய், ஒழுக்கம் உடையவனாய், பிறர்க்குப் பயன்படுபவனாய் வாழ முற்படுவதே சமய