பக்கம்:இன்றும் இனியும்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் தமிழும் 245 வாழ்க்கையாகும். இவற்றிற்கு அப்பால் அனைத்தையுங் கடந்து நிற்கின்ற ஒன்றை, கடவுள் என்ற ஒன்றை, மனத்தில் ஏற்றுக்கொள்பவனாய் வாழ்பவனே சமய வாதியாவான். - எனவே, கடவுள், மனித வாழ்வு என்ற இவை இரண்டினிடையே உள்ள தொடர்பு, இவ் வாழ்விலிருந்து கடவுளை அடையும் நெறி என்பவை பற்றிப் புகட்டுவதே சமயம் எனப்படும். இதுவே சமயம் எனில் பல்வேறு சமயங்கள் தோன்றவேண்டிய இன்றியமையாமை யாது என்ற வினா எழலாம். மக்கள் அனைவரும் ஒருபடியினராக இல்லையன்றோ? அவர வர்கள் வாழும் இடம், அதன் தட்பவெப்ப நிலை, சுற்றுச் சூழ்நிலை என்பவற்றால் பாதிக்கப்படுவது ஒருபுறம். மேலும், இவை அனைத்தும் ஒன்றாக உள்ள நிலையில் வாழும் பல்வேறு மனிதரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் வளர்ச்சியும் பல்வேறு படிகளில் இருக்கக் காணலாம். எனவே, இவர்கள் அனைவர்க்கும் ஒரே சமயம் பயன்படுமாறில்லை. ஆகவேதான், ஒவ்வொரு கருத்தை வலியுறுத்திக் கூறும் பல்வேறு சமயங்கள் அவ்வக் காலத்திற்கு ஏற்பவும் இடத்துக்கு ஏற்பவும் தோன்றலாயின. இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு தமிழ் மொழியின் பரப்பைக் காண்டல் வேண்டும். பிற் காலத்தில் வேற்று நாடுகளில் தோன்றி இந் நாட்டில் குடிபுகுந்த கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரண்டு தவிர ஏனைய சைவம், வைணவம், சைனம், பெளத்தம் ஆகிய நான்கும் இம் மொழியில் மிகுதியான இடம் பெற்றுள்ளன. கிறிஸ்தவமும் இஸ்லாமும் பிற் காலத்தே