பக்கம்:இன்றும் இனியும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த கவிதை 13 விடியற்கால நேரத்தில் மாளிகையின் அறைகளி னுள்ளே விளக்கு இருக்கலாம். ஆனால், அதைக் கூறாமல் சுற்றும் விளக்கெரிய என்று ஆசிரியர் பாடுவதில் ஏதோ ஓர் உண்மை இருத்தல் வேண்டும். வெறும் மரபுபற்றி இங்ங்ணம் பாடிவிட்டார் என்று நினைத்தால் கவிதையை நன்கு உணராதவர்களாக ஆகிவிடுவோம். எனவே, சற்று நின்று சிந்திக்க வேண்டும். - அனைவரும் உறங்குகின்ற வீட்டை வருணிக்க வந்த ஆசிரியர், சுற்றும் விளக்கு எரிகின்ற வீடு' என்று கூறவந்த காரணம் யாது? பின்னர்க் கூறப்போகின்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே இதனை விரிவு படுத்திப் பேசுகின்றார் என்ற உண்மையை அறிதல் வேண்டும். அதாவது, தலைவி இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டிருக்க வேண்டிய நேரத்தில் இன்னும் உறங்குகின்றாள்; எனவே, அவளுடைய மனத்தில் இருள் மண்டிக் கிடக்கின்றது என்ற கருத்தை வலியுறுத்த வருகின்றார் ஆசிரியர். ஆகவேதான், வீட்டைச் சுற்றி விளக்கு எரிந்தாலும், அந்த விளக்குகள் புற இருளைக் கடிகின்றனவே தவிர, தலைவியினுடைய அகத்திலுள்ள இருளைப் போக்கவில்லையே என்ற கருத்தைப் பேசுகின்றார். புற இருளைப் போக்குகின்ற விளக்கை நன்கு வலியுறுத்துவதற்காகச் சுற்றும் விளக்கெரிய என்று பாடுகின்றார். விளக்கு எரிகின்ற செயலை, அதுவும் வீட்டைச் சுற்றி எரிகின்ற செயலை நம்முடைய கற்பனையில் கொண்டு வந்தவுடன், துயில் அனைமேல் பள்ளிகொள்ளும் தலைவியின் மன இருள் பளிச்சென்று நம்முடைய கருத்தில் காட்சி அளிக்கின்றது. -