பக்கம்:இன்றும் இனியும்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 அ.ச. ஞானசம்பந்தன் இந்நாட்டில் பரவினமையின், அதற்கேற்ற முறையில் குறைந்த அளவு இம் மொழியில் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய வரலாறு என்று எடுத்துக் கொண்டால், தொல்காப்பியம் முதல் பாரதிதாசன் கவிதைகள் வரை இலக்கியம் பரவிக் கிடக்கிறது. கிறிஸ்துநாதர் தோற்றத்தின் முற்பட்டது என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற தொல்காப்பியம் என்ற இலக்கணம் ஏனைய மொழி இலக்கணம் போன்றதன்று. ஓர் இன மக்கள் பேசும் மொழிக்கு மட்டும் இலக்கணம் வகுக்காமல் அம்மக்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமை உலக மொழிகளுள் தமிழ்மொழி ஒன்றுக்கு மட்டுமே உண்டு. வாழ்வுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம், வாழ்வு நடைபெறுவதற்கு நிலைக்களமாயுள்ள இவ் வுலகையே ஐந்து பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொன் றிற்கும் ஒவ்வொரு கடவுளைக் கூறிச் செல்கிறது. "மாயோன் மேய காடுறை உலகம், சேயோன் மேய மைவரை உலகம் (தொல். அகம்-5) என்ற முறையில் பேசுவதுடன், நிலத்தில் உள்ள கருப் பொருள்களைப் பேசும்போதும் 'தெய்வம், உணாவே, மா, மரம் (தொல், அகம்-20) என்று பேசிச் செல்கிறது. மக்கள், வாழ்வு முழுமுதற் பொருளின் ஆணைக்குட்பட்டு நடை பெறுகிறது என்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டு, 'ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப (தொல், களவு- என்றும் கூறிச் செல்கிறது. குறிப்பிட்ட ஒரு சமயத்தின் சாயல் பெறாமல் கடவுட் கொள்கைபற்றிப் பேசுதலின், தமிழரின் ஆதிநூல் என்று பேசப்பெறும் தொல்காப்பியத்தில்