பக்கம்:இன்றும் இனியும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 ல் அ.ச. ஞானசம்பந்தன் என்ற பல பெயர்களில் பரம்பொருள் பேசப் பெறுகிறது. சங்கப் பாடல்களுள் ஒன்றாய பத்துப் பாட்டுள் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றிருப்பதும் எட்டுத் தொகையுள் பரிபாடல் இடம்பெற்றிருப்பதும் இத் தமிழ் மொழியில் சமயம் எந்த அளவிற்கு ஊடுருவி நின்றது என்பதை அறிவுறுத்தும். சமயம் என்பது தமிழரின் புறப்போர்வையாக அமையாமல் அகத்தே கலந்து வாழ்வில் இடம் பெற்றிருந்தது என்பதைப் பரிபாடல் போன்ற நூல்கள் காட்டுகின்றன. கடவுளைப் பற்றியே பேசும் மேற்கூறியவை தவிர, புறநானூறு போன்ற உதிரிப் பாடல்களிலும் தனிப் பட்ட கடவுளர் பெயர், இயல்பு போன்றவை பேசப் படுகின்றன. நன்றாய்ந்த நீள்நிமிர்சடை முது முதல்வன் புறம் - 166) கறைமிடற்று அண்ணல் (புறம் - 55) என்பன போன்ற குறிப்புகள் இறைவனையும், புறம் 14, 16, 23, 120, 125 - ஆகிய பாடல்கள் முருகனையும் குறிப்பிடுகின்றன. மேலும், அவனுக்குக் கோயில் இருந்தமையைப் புறம் 299-ஆம் பாடலும் இன்றும் தமிழர்க்குச் சிறந்த இடமான திருச்செந்தூரில் அன்றே முருகனுக்குக் கோயில் இருந்தமையை, வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை (புறம் - 55) என்னும் அடிகளும் பேசிச் செல்கின்றன. கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை யும் இறைவனிடம் மனிதன் வேண்டுவது யாது