பக்கம்:இன்றும் இனியும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் தமிழும் 249 என்பதையும் பரிபாடலின் ஒரு பாடல் மிகச் சிறந்த முறையில் அறிவித்துச் செல்கிறது. .. யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருள்இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே (பரிபாடல், 5. 78-81) அந்தப் பழங்காலத்திலேயே இத் தமிழர் பயன் கருதி இறைவனை வழிபடும் காமிய வழிபாட்டை மறுத்துப் பயன் கருதாத வழிபாட்டை வேண்டி நின்றனர் என்பது விளங்குகிறது. அருளும், அன்பும், அறனும் மூன்றும் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் இத் தமிழர் சமய வாழ்க்கையின் உச்சிக்கே சென்று விட்டனர் என்று கூறினால் மிகையாகாது. இறைவனுக்கு இவ்வாறு வடிவம், உருவம், நிறம் முதலியன தந்து பேசினாலும் சங்ககாலத் தமிழர் பரம் பொருள் குணங்குறி கடந்தது என்பதையும் அனைத்துமே அவனுடைய வடிவாகும் என்பதையும் நன்கு அறிந்திருந்தனர். மாநிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பெளவம் உடுக்கை ஆக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பகங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்று அகத் தடக்கிய வேத முதல்வன் என்ப (நற்றிணை - 1) என்று நற்றிணைப் பாடல் இவர்களது பரந்துபட்ட கடவுட் கொள்கையையும் அனைத்திலும் நிறைந் திருப்பவன் இறைவனே என்ற கருத்தையும் அறிவுறுத்து கிறது. இதே சங்கப் பாடல்களில் சுவர்க்கம், நரகம்