பக்கம்:இன்றும் இனியும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்யமும் தமிழும் 251 எனலாம். பிற நாட்டார் த கிழ்நாட்டில் படையெடுத்து வந்து காலூன்றிய பிறகே, சமயப் போராட்டமும் சகிப்பற்ற தன்மையும் இந் நாட்டில் கால்கொள்ள லாயின. மூன்றாம் நூற்றாண்டையொட்டிக் களப்பிரர் படையெடுப்பின் பின்னரே இத்தகைய ஒரு நிலை இவண் உண்டாயிற்று. களப்பிரர் வருவதற்கு முன்னரே கூட அருக, பெளத்த சமயங்கள் தமிழ்நாட்டில் நன்கு நிலைபெற்றுவிட்டன எனினும் போராட்டம் தோன்ற வில்லை. களப்பிரரும் அருகரேயாயினும் அவர்கள் இந்நாட்டில் கால்கொண்ட பின்னர் சமய மாறுபாடுகள் முகிழ்த்தன. - இதனை எண்ணும்போது ஒர் உண்மை புலனாகும். சமணமும் பெளத்தமும் களப்பிரர் வரவுக்கு முன்னும் தமிழ்நாட்டில் இருந்தன எனினும், பகைமைக்கு இடமில்லை. ஆனால், களப்பிரர் வரவின் பின்னர் சமயத்தின் பேரால் பூசல் தோன்றிற்று என்றால் என்ன பொருள்? அரசியல் போராட்டத் திற்குச் சமயத்தைப் போர்வையாகக் கொண்டனர் என்பதே பொருள். உலக வரலாற்றை ஒரு கண்ணோட்டம் விடுபவர்க்கும் இது புரியாமற் போகாது. நூற்றுக்குத் தொண்ணுறு அரசியற் போராட்டங்கள் சமயத்தின் பெயராலேயே நிகழ்த்தப் பெற்றன. தமிழ்நாடும் இதற்கு விலக்கன்று. களப்பிரர் வருகைக்கு முன்னர்ப் பலவாய சமயங்கள் நாட்டில் நடமாடினாலும் தம்முள் எவ்விதக் காழ்ப்புமின்றித் தமிழை வளர்த்தன. அதைவிடச் சிறப்பொன்றும் உண்டு. வடநாட்டில் தோன்றிய சமணமும் பெளத்தமும் தமிழ்நாட்டில் புகுந்தவுடனே, இங்கு இயல்பாகவே தோன்றி வளர்ந்த சைவ வைணவங்க ளோடு மாறுபாடின்றிக் கொண்டு கொடுத்துக்