பக்கம்:இன்றும் இனியும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 0 அ.ச. ஞானசம்பந்தன் கொண்டன. ஒரு சமயத்தின் கொள்கை மற்றொரு சமயத்திற்குச் சென்று பரவலாயிற்று. வேற்று நாட்டவர் வரவும் தங்க்லும் இந்த நல்ல சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டன. சகிப்பற்ற தன்மையும், போராட்டமும், காழ்ப்பும் தமிழர்க ளிடையே கால் கொள்ளலாயிற்று. இந்த நிலையைத் தான் மணிமேகலையில் முதன் முதலில் காண்கிறோம். ஒரு குடிகாரன் சமணத் துறவியை எள்ளி நகையாடி தாக மணிமேகலை பாடிச் செல்கிறது. காழ்ப்பு. காரணமாகப் பிற சமயத்தை எள்ளி நகையாடும் தீய பழக்கத்திற்கு வித்திட்ட பெருமை மணிமேகலை யையே சாரும். சிலம்பின் சகிப்புத்தன்மை எங்கே? மேகலையின் சகிப்பற்ற காழ்ப்பு எங்கே? இவை இரண்டும் சம காலத்தவை என்று கூறுவோர் இன்றும் உளர்! அடிப்படையில் ஏற்பட்ட இந்த மாறுபாடு நூலின் நடையையும் பாதித்துவிட்டது. சிலம்பின் நடைக்கும் மேகலையின் நடைக்கும் எத்துணை வேற்றுமை! சிலம்பின் காலம்வரை சமயம் மக்கள் வாழ்வில் ஊறி இடம் பெற்றுவிட்ட ஒன்றாயிருந்தது. மக்களை மாக்கள் கூட்டத்திலிருந்து பிரிக்கும் கருவியாகச் சமயம் அமைந்திருந்தது. அவர்கள் உணர்வில் இடம் பெற்றிருந்த சமயம் அவ்வுணர்வின் வெளிப்பாடாகிய மொழியிலும் இலக்கியத்திலும் இடம் பெற்றிருந்தது. வாதத்திற்கும் போராட்டத்திற்கும் இங்கு இடமே இல்லை. உதாரணமாக ஒன்றைக் கூறலாம். மாங்காட்டு மறையோன் கவுந்தி அடிகளாகிய சமணத் துறவிக்கு மதுரை செல்லும் வழியை விவரித்துக் கூறுகிறான். இன்ன இன்ன குளங்களில் (புண்ணிய