பக்கம்:இன்றும் இனியும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் தமிழும் 9 253 சரவணம், பவகாரணி, இட்டசித்தி) மூழ்கினால், இன்ன இன்ன பயன் விளையும் எனப் பேசுகிறான். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத சமணத் துறவியார் மிகக் கண்ணியமாக அது தேவை இல்லை என மறுக்கிறார். சமயப் பூசலைக் காட்டாமல் கண்ணியத்துடன் ஒருவர் கருத்தை மறுக்கும் இந்த அளவுக்குப் பண் பட்டிருந்த சமயம் வாழ்வின் ஒரு பகுதியாக அமைந்திருந்தவரை இதே அளவு பண்பாட்டுடன் இலங்கிற்று. சமயம் என்பது அறிவின் துணைகொண்டு ஆயப்படுவதொன்று அன்று; உணர்வின் துணை கொண்டு அனுபவிக்கப்படுவது. இது கருதியே போலும் ஞானசம்பந்தர் ஏதுக்களானும் எடுத்த மொழியானும் மிக்குச் சோதிக்க வேண்டா, சுடர் விட்டுளன் எங்கள் சோதியான் (3-54) என்று கூறிப்போனார். தாயுமானவரும் அருளால் எவையும் பாரென்றான், அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன், இருளான பொருள் கண்டதல்லால் கண்ட என்னையும் கண்டிலன்' என்று கூறினார் (தாயு. ஆனந்தக் களிப்பு, 13). உணர்வின் அடிப்படையில் சமயம் இருக்கும்வரை மாறுபாட்டிற்கு இடம் இல்லை. ஆனால், உணர்வை விட்டுவிட்டு அறிவின் துணை கொண்டு சமயத்தை நிலைநாட்ட முற்பட்டால் விளைவது போராட்டமே. காரணம் அறிவின் கூர்மைக்கு ஏற்பக் கருத்துகளை ஏற்கவும் மறுக்கவும் இயலுமன்றோ? மேலும், அறிவினால் ஒன்றை ஆயும்வரை, ஆயும் அறிவு, ஆயப்படும் பொருள், ஆய்தலாகிய தொழில் என மூன்று பொருள் இருந்தே தீரும். இந்நிலை உள்ளவரை சமய அனுபவம் கிட்டாது. உணர்வு வழிப்பட்ட சமய அனுபவத்தில் அனுபவிப்பவன்,