பக்கம்:இன்றும் இனியும்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 அ.ச. ஞானசம்பந்தன் அனுபவப்பொருள், அனுபவம் என்ற மூன்றும் அற்று அனுபவம் ஒன்றே எஞ்சும். - சங்க இலக்கியம் முழுதும் உணர்வின் அடிப் படையில் தோன்றிய கவிதைகள். அதனால், அங்குச் சமயப் போராட்டத்திற்கு இடமில்லை. திருக்குறள் அறிவின் அடிப்படையில் இயற்றப் பெற்றதாயினும், சமயத்தின் இந்தச் சிறப்பை உணர்ந்து, அதனை அறிவின் துணைகொண்டு ஆய முற்படாமல், உணர்வின் துணைகொண்டு ஏற்றுக்கொண்டு, அதனைக் கொண்டு செலுத்தும் வழிதுறைகளை மட்டும் கூறிச் சென்றது. - சங்கப்பாடல், சிலம்பு, குறள் என்பவற்றுடன் சமய உணர்வு மங்கி அந்த இடத்தில் சமய அறிவு வளரலாயிற்று. உணவிற்கு அதிக இடந்தராமல், அறிவுக்கு அதிக இடம் தந்து ஆயும் தொழிலில் சமயத்தைக் கொண்டுவிட்ட பெருமை புத்த சமயத்தையே சாரும். இதன் பிறகு ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயத்தை நிறுவ அறிவின் உதவியையே நாடினர். இதன் உண்மையை அறிய அதிகத்துரம் செல்ல வேண்டா, ஏதுக்களானும் எடுத்த மொழியானும் மிக்குச் சோதிக்க வேண்டா என்று சமய குரவருள் ஒருவராகிய ஞான சம்பந்தரே கட்டளை இட்டிருப்பவும், சைவர்கள் சிவஞான போதம், சித்தியார் முதலிய அளவை நூல்களால் தம் சமயத்தின் பெருமையைப் பறைசாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உணர்வின் துணைகொண்டு பொருள் ஒன்று என்று உணர்வது போக, 'அத்வைதம்' என்பதற்கு அறிவின் துணைகொண்டு பொருள் காண முனைந்தனர். இரண்டு அல்ல', 'இரண்டு இல்லை'