பக்கம்:இன்றும் இனியும்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் தமிழும் 9 255 'இரண்டுதான் என்பன போன்ற வாதங்கள் தோன்றலாயின. பழைய மரபில் நன்கு ஊறிய காரணத்தால் போலும் இந்தச் சமயப் பூசல்கள் தமிழில் அதிகம் பரவவில்லை. வடமொழியில் தடை விடை நூல்கள் மலிந்திருப்பதுபோலத் தமிழில் இல்லை. தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் அளவைகளின் உதவி கொண்டு சமயத்தை நிறுவுவதைக் காட்டிலும் அகத்தே நிகழும் உணர்வு கொண்டே சமயத்தைப் பரப்பும் நூல்களே மிகுதியாகும். அதனால்தான் போலும், சமய லக்கியம் என்ற பெயரில் பக்தி இலக்கியங்களே தமிழில் மிகுதியும் தோன்றின. உலக மொழிகளில் பக்தி இலக்கியம் என்று எடுத்துக் கொண்டால், தமிழ் மொழியின் அருகில் வரக்கூட எந்த மொழிக்கும் உரிமை இல்லை. இரண்டாவது இடத்தை ஹீப்ரு மொழியும் மூன்றாவது இடத்தை சமஸ்கிருதமும் பெறும். சிவஞானபோதம், சித்தியார் போன்ற ஒருசில சாத்திரங்கள் தவிர, சைவத்திலாகட்டும் வைணவத்தி லாகட்டும் சாத்திர நூல்கள் குறைவுதான். வட மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பெற்ற நூல்களும் சில உண்டு. தோத்திர நூல்கள் இத்துணை மிகுதியாகப் பெற்றுள்ள தமிழ் மொழி சாத்திர நூல்களை மிகுதியும் பெறாத காரணம் ஒன்றுண்டு என்று நினைக்கத் தோன்றுகிறது. அன்பு வழியாலும் பக்தி நெறியாலும் மட்டுமே சமயத்தை வளர்க்க முடியும்; விவகார ஞானத்தாலும் வாதத்தாலும் சமயத்தை நிறுவ முயலலாமே தவிர, வளர்க்க முடியாது. சமயம் என்பது உணர்வுக்குரியதொன்றே தவிர அறிவுக்கு உரிய தொன்றன்று அறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்றை, கடந்து நிற்கும் ஒன்றை அறிவின் துணைகொண்டு ஆயப்