பக்கம்:இன்றும் இனியும்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 அ.ச. ஞானசம்பந்தன் புகுவதைத் தமிழர் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இது கருதியே போலும், அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் (திருமந், 3059) என்று பழைய திருமந்திரமும், அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே t - - அருட்பா) என்று புதிய அருட்பாவும் பறைசாற்றுகின்றன. நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் - (திருக்குறுந். 90) என்று திருநாவுக்கரசரும், ஆடி ஆடி அகங் கரைந்து, இசை பாடிப்பாடிக் கண்ணிர் மல்கி எங்கும் நாடிநாடி நரசிங்கா என்று . (நாலாயிரம், 2818) என நம்மாழ்வாரும் அருளிப் போயினர். ... " நம் காலத்து வாழ்ந்த வள்ளலாரும், நினைந்துநினைந்து) உணர்ந்து) உணர்ந்து

  • நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந்து) ஊற்றெழுங்கண்

. . . ணிரதனால் உடம்பு நனைந்துநனைந்து அருளமுதே நன்னிதியே ஞான