பக்கம்:இன்றும் இனியும்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் தமிழும் 8 257 நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வணைந்துவனைந்து) ஏத்துதும்நாம் வம்மினுல கியலிர் என்று அன்பின் வழியினாலன்றிச் சமய வாழ்க்கை கைகூடாதென்றும் இறைவனை அடைய முடியாது என்றும் கூறினர். - இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு, பார்த்தால், தமிழ் மொழியில் சாத்திரங்கள் அதிகம் தோன்றாமல் தோத்திரங்கள் அதிகம் தோன்றிய தற்கும் உரிய காரணத்தை ஒருவாறு அறிய முடியும். என்றாலும், தமிழில் தோன்றிய பேரிலக்கியங்கள் அனைத்தும் சமயத் தொடர்புடனேயே உள்ளன என்பதை மறத்தலாகாது. சிலப்பதிகாரம், மணி மேகலை, பெருங்கதை, வளையாபதி, சூளாமணி, நீலகேசி, குண்டலகேசி, தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், சிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், வில்லி பாரதம், திருப்புகழ், பிரபுலிங்க லீலை, குமரகுருபரர் பிரபந்தங்கள் ஆகிய இவை என்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்கள். இவற்றுள் ஒன்றேனும் சமயத் தொடர்பில்லாத இலக்கியமா என்பதைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். பிற மொழிகளில் பல்வேறு துறைகளில் இலக்கியம் உண்டு; அவற்றுள் சில சமயம்பற்றியும் இருக்கும். ஆனால், இத் தமிழ் மொழியில் இலக்கியம் என்ற பெயரைப் பெறக்கூடியவை அனைத்துமே சமயத் தொடர்புடையனவாய் இருத்தல் அறிதற் குரியது. சமயத் தொடர்பற்ற நூல்கள் தமிழிலும் இ.இ.-17