பக்கம்:இன்றும் இனியும்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ல் அ.ச. ஞானசம்பந்தன் தோன்றியிருக்கலாம். ஆனால், அவற்றிற்குக் காலத்தை வென்று நிலைபெறும் வன்மை இல்லைபோலும்; எனவே, அவை இன்றுவரை நின்று நிலவவில்லை. இப் பேரிலக்கியங்கள் ஒருபுறம் இருக்கச் சிற்றிலக்கியங்க ளாகிய பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, பள்ளு, உலா ஆகியவையுங்கூடச் சமயத் தொடர்புடையனவாகவே அமைந்துள்ளன. ஆதலால்தான், சமயமின்றித் தமிழில்லை என்று கூறுவது பொருள் பொதிந்த மொழியாக அமையக் காண்கிறோம்.