பக்கம்:இன்றும் இனியும்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 . எண்ணத்தின் 원) ற்றல் மனிதன் விலங்கினின்றும் வளர்ந்தவன் என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. இவ்வாறு வளர்வதைக் கூர்தல் அறம் (Evolution) என்று அவர்கள் குறிக்கின்றனர். 19-ஆம் நூற்றாண்டில் தோன்றிய மேலை நாட்டு விஞ்ஞானி 'டார்வின் கருதுகோளில் பிறந்தது இக்கொள்கை. ஆனால் டார்வின் இம்மண்ணிடைத் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன்னரே இந்நாட்டில் தோன்றிய சமயப் பெரியாராகிய மணிவாசகப் பெருமான் இக் கருத்தை விரிவாகவே கூறிச் சென்றுள்ளார். புல் ஆகி, பூண்டாய், புழுவாய், மரம் ஆகி பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய் வல்அசுரர் ஆகி, முனிவராய், தேவராய், செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் சிவபுராணம் 26-31) கூர்தல் அற முறை கவிதை வடிவு கெடாமல் இருப்பதற்குப் பெரியார், கூர்தல் அறத்தில் முறை மாற்றம் செய்து