பக்கம்:இன்றும் இனியும்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ல் அ.ச. ஞானசம்பந்தன் கூறி உள்ளார் எனினும் இதில் கூறப் பெற்றுள்ள கூர்தல் அறத்தைக் கவனியாமல் இருத்தல் இயலாது. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயப் பெரியார் கூறும் கூர்தல் அறம் டார்வினின் அறத்தைவிட துண்மையானது. டார்வினின் கூர்தல் அறம் மனித னுடன் நின்று விடுகிறது. நம் மணிவாசக அடிகளாரின் அறம் அதனைக் கடந்து பல படிகள் மேலே செல்கிறது. மனிதனுக்குப் பிறகு, பேய், வல்அசுரர், முனிவர், தேவர் என்ற பல நிலைகளையும் பற்றி பேசுகிறது. மேனாட்டார் இன்று இதனை ஏற்றுக் கொண்டாலும், கொள்ளா விட்டாலும் இக்கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு காலம் வரத்தான் போகிறது. பூத உடல், நுண் உடல் மனிதன், பேய், அசுரர், முனிவர், தேவர் என்ற பல்வேறு நிலைகளில் உள்ள உயிர் வருக்கத்திற்கு ஒரு பொதுவான தொடர்ச்சி இருத்தல் வேண்டும். அதுவே மனமும் அதில் தோன்றுகின்ற எண்ணம் என்பவையு மாகும். ஐந்து பூதங்களினால் ஆகிய இந்த உடலுடன் கூடிய மனிதன், நுண் உடலுடன் கூடிய பேய், தேவர், அசுரர் என்ற எல்லா இனத்துக்கும் பொதுவாக உள்ளது மனம் என்ற ஒன்றுதான். மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணமே மனம் என்ற ஒன்று அவனிடம் அமைந்திருப்பதுதான். மனிதனிடம் பொறிகள் (மெய், வாய், கண், மூக்கு, செவி) உள்ளன. இப்பொறிகளின் மூலமாக அவன் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புல அனுபவங்களைப் பெற முடிகிறது. என்றாலும் என்ன? பொறிகள் மட்டும் இருந்து மனம் இல்லையானால் புல அனுபவம் ஏற்பட வாய்ப்பில்லை. விலங்குகட்கு ஐம்பொறிகள் உண்டு.